Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : பிப் 24, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழக வெற்றிக் கழகக் கட்சி தலைவர் விஜய்க்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த, 'ஒய்' பிரிவு பாதுகாப்பில், சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், காவலர்கள் அடங்கிய எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர்?

அ. 25

ஆ. 24

இ. 30

ஈ. 15

2. இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 17 ஆண்டுகளில் முதன்முறையாக, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், எவ்வளவு கோடி ரூபாய் லாபத்தை ஈட்டிள்ளது?

அ. ரூ.250 கோடி

ஆ. ரூ.145 கோடி

இ. ரூ.262 கோடி

ஈ. ரூ.350 கோடி

3. உலகின் மிக நீண்ட ஆழ்கடல் இன்டர்நெட் கேபிள் திட்டமான, 'பிராஜெக்ட் வாட்டர்வொர்த்'இல், எந்த நாடும் இணைக்கப்பட உள்ளதாக, 'மெட்டா' நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஜப்பான்

4. துபாயில், 'கின்னஸ்' நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், மனக்கணிதப் போட்டியில் அபாரமாகக் கணக்கிட்டு, ஒரே நாளில் ஆறு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள 14 வயது சிறுவன் ஆர்யன் சுக்லா, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. குஜராத்

ஆ. சட்டீஸ்கர்

இ. மகாராஷ்டிரம்

ஈ. கேரளம்

5. உதவிப் பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான எந்தத் தேர்வை, கணினி வழியில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது?

அ. டெட்

ஆ. சாட்

இ. செட்

ஈ. கேட்

6. தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக, 'கூகுள் பிளே ஸ்டோர்'ல் இருந்து, எத்தனைச் செயலிகளைப் பதிவிறக்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது?

அ. 110

ஆ. 120

இ. 100

ஈ. 119

7. அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'எக்ஸ் ஏஐ' நிறுவனம், செயற்கை நுண்ணறிவு செயலி ஒன்றை இந்தியாவில், 'ஆப்பிள்' மொபைல்போனில் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் என்ன?

அ. கிராக் 3

ஆ. பிராக் 4

இ. டிராக் 5

ஈ. பிரேக் 10

8. உத்தரகாண்ட்டில் நடந்த 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கப் பட்டியலில், தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பிடித்தது?

அ. ஆறாவது

ஆ. இரண்டாவது

இ. முதலாவது

ஈ. மூன்றாவது

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. இ, 5. இ, 6 ஈ, 7. அ, 8. அ.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us