sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : பிப் 17, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள, ரெப்போ வட்டி விகித குறைப்பில், மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டியில் எவ்வளவு சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதமாகியுள்ளது?

அ. 0.15

ஆ. 0.25

இ. 0.20

ஈ. 0.18

2. உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலையை அமுல் நிறுவனம், ரூ.600 கோடி மதிப்பீட்டில், இந்தியாவின் எந்த நகரத்தில் அமைக்கிறது?

அ. கோல்கட்டா

ஆ. மும்பை

இ. சென்னை

ஈ. பெங்களூரு

3. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எந்த மாநில முதல்வரான பைரேன் சிங், தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுக்கவும், உட்கட்சி நெருக்கடியைத் தவிர்க்கவும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்?

அ. மணிப்பூர்

ஆ. சிக்கிம்

இ. நாகாலாந்து

ஈ. மிசோரம்

4. இலங்கையில், மின் நிலையத்திற்குள் புகுந்த எந்த விலங்கு செய்த சேட்டையால், சமீபத்தில் நாடு முழுவதும், 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது?

அ. யானை

ஆ. எலி

இ. குரங்கு

ஈ. பூனை

5. அமெரிக்காவின் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றான, 1 சென்ட் நாணயத்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும்படி கருவூலத்துறைக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாணயத்தின் பெயர் என்ன?

அ. யூரோன்

ஆ. டென்னி

இ. டாலர்

ஈ. பென்னி

6. தமிழகத்தில் உள்ள, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகள், என்னவாகச் சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன?

அ. மாநகராட்சி

ஆ. ஊராட்சி

இ. நகராட்சி

ஈ. உள்ளாட்சி

7. உத்தரகாண்டில் நடந்த, 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஆதர்ஷ் ராம், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. தமிழகம்

ஆ. உத்தரப்பிரதேசம்

இ. ஆந்திரம்

ஈ. தெலங்கானா

8. அணுமின் உற்பத்திக்கான சிறிய அணு உலைகளைக் கூட்டாகத் தயாரிப்பது தொடர்பாக, எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?

அ. அமெரிக்கா

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. ரஷ்யா

விடைகள்: 1. ஆ, 2. அ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. இ, 7. அ. 8. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us