Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: 'பல'வற்றைக் கண்டறிக

அமிழ்தமிழ்து: 'பல'வற்றைக் கண்டறிக

அமிழ்தமிழ்து: 'பல'வற்றைக் கண்டறிக

அமிழ்தமிழ்து: 'பல'வற்றைக் கண்டறிக

PUBLISHED ON : மார் 17, 2025


Google News
ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைக் குறிக்கும் சொற்களில் இன்றியமையாதவை பல, சில. இவற்றில் 'பல' என்னும் சொல், பல சொற்றொடர்களில் முன்னொட்டாகத் தோன்றி, அழகிய புதுச்சொற்களை ஆக்கித் தந்திருக்கிறது.

இந்தப் புதிரில் பல என்ற சொல்லை முன்னொட்டாகக் கொண்ட சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அ. பல கலைகளைக் கற்றுத் தரும் பெருங்கல்வியகம் ___________________

ஆ. பல குழிகளைக்கொண்ட பலகையில் ஆடும் விளையாட்டு ___________________

இ. பல ஆண்டுகள் ___________________

ஈ. பன்மையைக் குறிக்கும் அஃறிணைப் பால் பிரிவு ___________________

உ. ஒருமைக்கு எதிர்ச்சொல் ___________________

ஊ. பாவேந்தரின் கவிதைத் தொகுப்பின் பெயர் ___________________

எ. பகுத்துண்டு ___________________ ஓம்புதல்

ஏ. பல கண்களைக் கொண்டுள்ளமையால் சன்னலுக்கு வழங்கப்படும் பெயர் __________________

ஐ. பல நாடுகள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் ___________________

-மகுடேசுவரன்

விடைகள்:

அ. பல்கலைக்கழகம்

ஆ. பல்லாங்குழி

இ. பல்லாண்டு

ஈ. பலவின்பால்

உ. பன்மை

ஊ. பன்மணித்திரள்

எ. பல்லுயிர்

ஏ. பலகணி

ஐ. பன்னாட்டுக் கருத்தரங்கம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us