Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/கணினி அறிவியல்: பொருத்தமற்றதை நீக்குங்கள்

கணினி அறிவியல்: பொருத்தமற்றதை நீக்குங்கள்

கணினி அறிவியல்: பொருத்தமற்றதை நீக்குங்கள்

கணினி அறிவியல்: பொருத்தமற்றதை நீக்குங்கள்

PUBLISHED ON : மார் 24, 2025


Google News
கணினி மற்றும் நிரலாக்கம் தொடர்பான வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டுபிடித்து நீக்குங்கள்.

1. அ. குரோம் (Chrome), ஆ. ஃபயர்பாக்ஸ் (Firefox), இ. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge),

ஈ. விண்டோஸ் (Windows).

2. அ. சின்டாக்ஸ் எரர் (Syntax Error), ஆ. ரன்டைம் எரர் (Runtime Error), இ. அல்காரிதம் (Algorithm), ஈ. லாஜிக் எரர் (Logic Error).

3. அ. பிட் (Bit), ஆ. ஹெர்ட்ஸ் (Hertz),இ. பைட் (Byte), ஈ. கிலோபைட் (KiloByte).

4. அ. குக்கீ (Cookie), ஆ. கேட்ச் (Cache),இ. செஷன் (Session), ஈ. ப்ராக்ஸி சர்வர் (Proxy Server).

5. அ. சிஸ்டம் சாப்ட்வேர் (System Software),ஆ. அப்ளிகேஷன் சாப்ட்வேர் (Application Software), இ. ரேம் (RAM), ஈ. கம்பைலர் (Compiler).

விடைகள்:

1. ஈ. விண்டோஸ் (Windows) - இயங்கு தளம் (OS). மற்ற மூன்றும் இணைய உலாவிகள் (Web Browsers).

2. இ. அல்காரிதம் (Algorithm) - நிரலாக்க செயல்முறை. மற்ற மூன்றும் நிரல் எழுதும்போது வரும் பிழைகள்.

3. ஆ. ஹெர்ட்ஸ் (Hertz) - அதிர்வெண் அலகு. மற்ற மூன்றும் தரவிற்கான அலகுகள்.

4. ஈ. ப்ராக்ஸி சர்வர் (Proxy Server) - இணைய பாதுகாப்பு கருவி. மற்ற மூன்றும் தரவு சேமிப்பு அமைப்புகள்.

5. இ. ரேம் (RAM) - வன்பொருள். மற்ற மூன்றும் மென்பொருள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us