Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: வெப்பம் தணிக்கும் வெள்ளரிக்காய்!

உயிரியல் உலகம்: வெப்பம் தணிக்கும் வெள்ளரிக்காய்!

உயிரியல் உலகம்: வெப்பம் தணிக்கும் வெள்ளரிக்காய்!

உயிரியல் உலகம்: வெப்பம் தணிக்கும் வெள்ளரிக்காய்!

PUBLISHED ON : மார் 10, 2025


Google News
Latest Tamil News
* உலகளவில் அதிகம் பயிரிடப்படும் காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று.

* மனிதர்கள் 3,000 ஆண்டுகளாக வெள்ளரிக்காயை வளர்த்துச் சாப்பிட்டு வருகின்றனர்.

* வெள்ளரியின் தாயகம் தெற்கு ஆசியா. இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.

* இது குக்கர்பிட்டேசி (Cucurbitaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கொடி வகைத் தாவரங்களான பூசணி, தர்பூசணி, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் இதே குடும்பத்தைச் சேர்ந்தவை தான். தாவரவியல் பெயர் குக்குமிஸ் சட்டைவஸ் (Cucumis sativus).

* வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, நாவறட்சியை நீக்கும், பசியை உண்டாக்கும், உடலைக் குளிர வைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்டவை உண்டு.

* விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர். ஆனால், மக்கள் இதைக் காய்கறிப் பட்டியலில் வைத்துள்ளனர்.

* உலகில் 120க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான வெள்ளரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன. இவை பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் இருக்கின்றன. பெரும்பாலான வெள்ளரிக்காயில் விதைகள் இருக்கும். சில வகைகள் மட்டுமே விதைகளற்றவை.

* உணவு மற்றும் விவசாய அமைப்பு நிறுவன புள்ளிவிவரத்தின்படி (Food and Agriculture Organization Corporate Statistical Database) (FAOSTAT) 2018ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 8.2 கோடி டன்களுக்கும் அதிகமான வெள்ளரிக்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவின் உற்பத்தி 6.1 கோடி டன்களுக்கும் அதிகம்.

* கின்னஸ் உலக சாதனைப் பட்டியலின்படி, இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிக நீளமான வெள்ளரிக்காய் 106.9 செ.மீ நீளம், மிக அதிக எடை கொண்ட வெள்ளரிக்காய் 12 கிலோ கிராம் எனப் பதிவாகி உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us