என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM




சிலருக்கு இது வாழ்க்கையின் ஒரு இடைநிலை, வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை. சிலருக்கு, சாலையோர வாழ்வின் வலிகளை ஓரளவு மறக்கும் இடம்.
DUSIB நிர்வாகம், தில்லியின் பல பகுதிகளில் ஏற்கனவே இது போன்ற இரவு தங்குமிடங்களை நிர்வகிக்கிறது.சிலைமான் ரோட், யமுனா பங்க், காச்மீரி கேட், சரை காலே கான் போன்ற பகுதிகளில் இந்த திட்டங்கள் நகரத்தை மனிதநேயம் மிக்க நகரமாக மாற்றும் நோக்கில் செயல்படுகின்றன.அதிகரிக்கும் நகர்மயமாக்கல், அகதிகள், வேலை தேடிப் புறநகரிலிருந்து வரும் பொதுமக்கள் ஆகியோருக்கான தேவையை கருத்தில் கொண்டால், இத்தகைய தங்குமிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை.

புதிய வீடு இல்லை என்றாலும், ஒரு இரவுக்கு நிம்மதி வேண்டும். சாப்பாடு இல்லை என்றாலும் ஒரு படுக்கை வேண்டுமென்பது மனிதத்தின் அடிப்படை உரிமை. சரை காலே கான் இரவு தங்குமிடம், அந்த உரிமையை குறைந்தபட்சமாகக் கொண்டுவரும் சமூக நலத்தின் உணர்வுச் சின்னமாக உள்ளது.
-எல்.முருகராஜ்.