Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நிஜக்கதை/ நினைவில் வாழும் டாக்டர் சாந்தா

நினைவில் வாழும் டாக்டர் சாந்தா

நினைவில் வாழும் டாக்டர் சாந்தா

நினைவில் வாழும் டாக்டர் சாந்தா

PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
Image 1392684ஒருவர் வாழும் போது எந்தளவு சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்தார் என்பது அவர் மறைந்த பிறகு நினைக்கப்படுவதில்தான் தெரியும் என்பர்

அதற்கு உதாரணமாக திகழ்பவர்தான் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் அமரர் டாக்டர் வி.சாந்தா.

டாக்டர் சாந்தா 1927 மார்ச் 11 அன்று சென்னையில் பிறந்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமனின் குடும்பத்தைச் சேர்நதவர்.

சென்னையில் மருத்துவம் படித்து முடித்ததும் 1954 ஆண் ஆண்டு அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் தனது பணியினைத் துவங்கினார்.

புற்று நோயாளிகளின் நலனிற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் திருமணம் செய்து கொள்ளவில்லை.எப்போதும் மருத்துவமனையிலேயே இருப்பார்.நோயாளிகளிடம் அன்பு காட்டுவதிலும், ஆதரவாக பேசுவதிலும்,அணைத்துக் கொள்வதிலும் அவருக்கு அவர் அவரே.

புற்றுநோய் என்பது மிகவும் கொடிய நோய் , அதிக செலவு செய்யவேண்டிய நோய் என்று கருதப்பட்டதை மாற்றி அமைத்தார், புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அது குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை நிரூபித்தார், ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

நாட்டில் புற்றுநோயே இருக்கக்கூடாது என்பதற்காக ஆராய்ச்சி மையத்தையும் மருத்துவமனை வளாகத்திலேயே துவக்கினார்.

இந்தியாவிலேயே முதன்மையான புற்றுநோய் சிகிச்சை மையம் என்ற பெயரை மருத்துவமனைக்கு பெற்றுத்தந்தார்.

நாடு முழுவதிலும் இருந்து நோயாளிகள் நம்பிக்கையுடன் இங்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பினர்.

பெண்கள்,குழந்தைகளுக்கு தனித்தனி பிரிவினை துவக்கி உலகத்தர சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தார்.

நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை இங்கு பல பிரமுகர்கள் வந்துள்ளனர் மருத்துவமனையின் சேவையைப் பார்த்து பல கோடீஸ்வரர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர் கட்டிடடமாகவும் கட்டிக் கொடுத்துள்ளனர்.

தனக்கு பிறகு மருத்துவமனை இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிபுணர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் கொண்ட அறக்கட்டளையை நிறுவினர்.

பத்ம ஸ்ரீ,பத்ம பூஷன்,பத்ம விபூஷன் என்று நாட்டின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார் ஆனால் அந்த விருதுகளை விட புற்று நோய் குணமாகிச் செல்லும் போது தன் கைபிடித்துக்கொண்டு நோயிலிருந்து விடுதலையானவர் விடும் இரண்டு சொட்டு ஆனந்த கண்ணீர்தான் தனக்கு பெரிய விருது என்பவர்.

தனது 93 வயதில் இறப்பதற்கு முதல் நாள் வரை மருத்துவமனை தொடர்பான வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அவர் இறந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவதற்காக செனற போதுதான் அவர் எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.Image 1392686அவர் இறந்த நான்கு வருடங்களாகிறது ஒவ்வாரு வருடமும் அவர் இறந்த மார்ச் மாதத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்திலேயே நடத்தப்படும்.நான்காவது வருடமாக இன்று நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் சாந்தா மருத்துவம் படித்த அதே வருடம் மருத்துவம் படித்தவரும் ,தற்போது 98 வயதைத் தொட்டுள்ளவருமான டாக்டர் எம்.கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, டாக்டர் சாந்தா குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில் 20 வருடத்திற்கு மேல் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சிக்கு ஏாரளமான மருத்துவர்கள் சமூக சேவர்கள் மருத்துவமனை அலுவலர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு டாக்டர் சாந்தாவின் நினைவுகளில் கரைந்தனர்.

-எல்.முருகராஜ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us