sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

தந்தைக்கு மகன் செய்த 'மதிப்பெண்' அஞ்சலி

/

தந்தைக்கு மகன் செய்த 'மதிப்பெண்' அஞ்சலி

தந்தைக்கு மகன் செய்த 'மதிப்பெண்' அஞ்சலி

தந்தைக்கு மகன் செய்த 'மதிப்பெண்' அஞ்சலி

3


PUBLISHED ON : மே 08, 2026 03:50 PM

Google News

PUBLISHED ON : மே 08, 2026 03:50 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதையூட்டிய கைகளுடன் தேர்வு எழுதி சிவகங்கை மாணவர் சாதனை!

தமிழகமே ஆவலுடன் காத்திருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், சிவகங்கை சம்பவ்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற மாணவர் ஹர்ஷித் ராஜலிங்கம் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

ஆனால், இந்த எண்களுக்குப் பின்னால் ஒரு தீரம் மிக்க துயரக் கதை ஒளிந்திருக்கிறது.தேர்வுத் திருவிழா நடந்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில், ஹர்ஷித்தின் தந்தை செந்தில் மாரடைப்பால் காலமானார். தந்தை மீது அளவற்ற பாசம் கொண்ட அந்தச் சிறுவனுக்கு உலகம் இருண்டது. அழுது துடித்த ஹர்ஷித்தின் காதுகளில், 'நீ நல்லா படிச்சு பெரிய என்ஜினீயராகணும்' என்று தந்தை அடிக்கடி சொன்ன வார்த்தைகள் மட்டும் ரீங்காரமிட்டன.Image 1574173தந்தையின் ஆன்மா அமைதியடைய வேண்டுமென்றால், பாதியில் விடாமல் தேர்வு எழுதுவதே தர்மம் என்று முடிவெடுத்தார்.தந்தையின் உடல் வீட்டில் இருக்க, இதயத்தில் துக்கத்தைச் சுமந்துகொண்டு ஹர்ஷித் அன்று தமிழ் தேர்வு எழுதச் சென்றார். அந்த வலியிலும் அவர் பேனா பிடித்து எழுதிய எழுத்துக்கள் அவருக்கு 99 மதிப்பெண்களைப் பெற்றுத் தந்துள்ளன. மகனின் மதிப்பெண்களைப் பார்த்த தாய் லட்சுமி, இழந்த கணவனை நினைத்து கண்ணீர் வடித்தாலும், தன் மகன் அந்த இக்கட்டான சூழலில் காட்டிய மன உறுதியை எண்ணிப் பெருமிதம் கொண்டார். 'ஒரு நல்ல வேலையில் சேர்ந்து அம்மாவைப் பார்த்துக்கொள்வேன்' என ஹர்ஷித் சொல்லும் வார்த்தைகள், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நம்பிக்கையாக ஒலிக்கிறது.

-எல்.முருகராஜ்-படம்:சிவகெங்கை மாதவன்






      Dinamalar
      Follow us