Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எங்கிருந்து வந்தது?

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எங்கிருந்து வந்தது?

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எங்கிருந்து வந்தது?

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் எங்கிருந்து வந்தது?

PUBLISHED ON : ஜன 12, 2025


Google News
Latest Tamil News
குளிர் காலத்தில் சுவாச மண்டலம் தொடர்பான கோளாறுகள் அதிகமாவது இயல்பு.

சீனாவிலும் இது தான் நடக்கிறது.

'ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்' - ஹெச்.எம்.பி.வி., இது புது வைரஸ் கிடையாது. பல காலமாக குளிர் காலத்தில் பரவக் கூடிய வைரஸ் தான். கொரோனா பாதிப்பிற்கு பின் சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், பி.சி.ஆர்., பரிசோதனை செய்வது அதிகமாக உள்ளது. இதனால் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகமாகத் தெரிகிறது.

இந்தப் பருவத்தில் சில நேரங்களில், பாக்டீரியா, வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும்.

சில ஆண்டுகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு உலகம் முழுவதுமே அதிகமான பாதிப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. நம் நாட்டிலும் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

பல மாநிலங்களில் உள்ள மருத்துவர்களை கேட்டபோது, கடந்த பல வாரங்களாகவே ஹெச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதாகவே சொன்னார்கள்.

சென்னையிலும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதே நிலை உள்ளது. இந்த வைரஸ் கிருமி 2000ம் ஆண்டில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1950ம் ஆண்டிலிருந்தே இந்த வைரஸ் பரவுவதாக செய்திகள் கூறுகின்றன.

சீனாவில் மொத்த சுவாசக் கோளாறுகள் பாதிப்பில 30 சதவிதம் பேருக்கு புளூ பாதிப்பு, கொரோனா, மைக்கோ பிளாஸ்மா பாதிப்பு 20 சதவீதம், இது தவிர, ஆர்.என்.ஏ., அடினோ வைரஸ் பாதிப்பும் உள்ளது.

ஹெச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவு தான், புளூ பாதிப்பு தான் பிரதானமாக உள்ளது என்று சீனா கூறுகிறது.

அமெரிக்காவிலும் பாதிப்பு உள்ளது. நம் நாட்டில் பல நகரங்களில் இருக்கும் பாதிப்பை பெரிய அளவில் பேசுகிறார்கள். இந்த அளவிற்கு அச்சப்பட தேவையில்லை.

கோல்கட்டா, பெங்களூருவில் குழந்தைகள் நல டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை செய்கிறார்கள்.

ஹெச்.எம்.பி.வி.,வைரஸ் பாதித்தால், லேசான சளி, இருமல் இருக்கும். சுவாசப் மண்டலத்தின் மேல் பக்தியை பாதிப்பதால், குழந்தைகள், முதியவர்கள், நோய எதிர்ப்பு சக்தி குறைவான, இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இரண்டாம் நிலை பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டு நிமோனியாவை உண்டாக்கலாம்.

பிரத்யேக சிகிச்சைகள் கிடையாது. அறிகுறிகளை வைத்தே மருந்துகள் தரப்படுகிறது. புளூவிற்கு போடப்படும் தடுப்பூசியும் பலன் தராது.

கொரோனாவில் கற்றுக் கொண்ட சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவதை பின்பற்ற வேண்டும்.

சீனாவில் பரவுவதால் இயல்பாகவே இது குறித்து அச்சம் இருக்கிறது.

எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை. மத்திய சுகாதாரத் துறையும் நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவே கூறுகிறது.

இதுவரையிலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.



டாக்டர் எஸ். சுப்ரமணியன்,

தொற்று நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,

குளோபல் மருத்துவமனை, சென்னை7996789196info.chn@gleneagleshospitals.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us