Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/அடிக்கிற வெயிலில் மூளை கொதிக்குதே!

அடிக்கிற வெயிலில் மூளை கொதிக்குதே!

அடிக்கிற வெயிலில் மூளை கொதிக்குதே!

அடிக்கிற வெயிலில் மூளை கொதிக்குதே!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
கடந்த ஜூலை 2016ல், அமெரிக்காவின் பாஸ்டன் நகரை மோசமான வெப்ப அலை தாக்கியது. பகல் நேர வெப்பநிலை 33 டிகிரி செல்ஷியசாக தொடர்ந்து ஐந்து நாட்கள் இருந்தது. இது, அந்நகரின் ஆண்டு சராசரி வெப்பநிலையை விட 6 டிகிரி அதிகம். குறிப்பாக இரவு நேரங்களில் தாக்கும் வெப்ப அலை, இளைஞர்களின் அறிவுத் திறனை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஆராய, கணிதப் பிரிவைச் சேர்ந்த 44 மாணவர்களை தேர்வு செய்தேன்.

இவர்களில் பாதி பேரை, 26 டிகிரி செல்ஷியசாக இருந்த இரவுகளில் 'ஏசி' இல்லாத அறையிலும், மீதி பேரை ஏசி அறையிலும் தங்க வைத்தேன். ஏசி இல்லாத அறையில் தங்கியிருந்த மாணவர்களால் மறுநாள் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சிக்கலான கணக்குகளை போட சிரமப்பட்டனர். ஒருவித வெறுப்பான மனநிலையில் எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தனர். ஆனால், ஏசி அறையில் துாங்கிய மாணவர்கள் முழு கவனத்துடன் படித்தனர்; கணக்கு போட்டனர்.

• மனநிலையை வெப்ப அலை எப்படி பாதிக்கிறது?

சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை ஆராய்ந்ததில், கோடை விடுமுறை காலங்களில் அதிகமாக கொலை, சிறிய விஷயத்திற்கு எல்லாம் பொறுமை இழந்தது, மற்றவரை அடிப்பது, உதைப்பது போன்ற சம்பவங்கள் வீட்டிலும், வெளியிலும் அதிகமாக நடக்கின்றன. சமூக வலைதளங்களிலும் அதே நிலை தான். உஷ்ணமான நாட்களில், வெறுப்பைத் துாண்டும் 'போஸ்ட்'டுகள் அதிகமாக வருகின்றன.

இவை பற்றி 2018ல் செய்த ஆய்வில், இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேமை, உஷ்ணம் அதிகம் இருந்த அறையில் இருந்து விளையாடியவர்கள், எதிர்மறை கதாபாத்திரங்களை ரசித்து, மற்றவர்கள் மேல் வெறுப்பை கொட்டியிருந்தனர்.

• மூளையை வெப்ப அலை எப்படி பாதிக்கிறது?

உண்மையில் அதீத வெப்பம் நம் அறிவாற்றலையும், உணர்வுகளையும் எப்படி பாதிக்கிறது என்பதற்கு இரு வேறு ஆராய்ச்சிகள் உள்ளன.

ஒன்று, உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை குறைப்பதற்கான வழிமுறைககளை தேடுவதிலேயே அதிகப்படியான சக்தியை மூளை செலவு செய்கிறது. உடலை குளிர்விக்கும் செயலில் கவனமாக உள்ள மூளைக்கு அதிகப்படியாக குளுகோஸ், ரத்தம் செல்கிறது.

மற்ற உறுப்புகளுக்கு செல்வது குறைகிறது. 'எவ்வளவு வெப்பம், உடம்பே கொதிக்குதே. உடனடியாக உடலை குளிர்விப்பதற்கான செயலில் இறங்காவிட்டால் என்ன ஆகுமோ' என்று வெப்பம் ஏற்படுத்தும் உணர்வுகளிலேயே நம் சிந்தனை முழுவதும் இருக்கிறது.

அதிக வெப்பமான சூழலில் இருந்தால் துாக்கமும் பாதிக்கப்படும். தொடர்ந்து பல உடல் பிரச்னைகள் வரலாம்.

• என்ன தான் தீர்வு?

சுற்றுப்புறச் சூழல் எத்தனை வெப்பமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம் உடம்பை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு தகுந்தவாறு எதைச் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணிகிறதோ, அந்த உணவை சாப்பிட வேண்டும். அப்போது தான் மூளையின் செயல்திறன், அறிவாற்றல், உணர்வுகள், சிந்திக்கும் செயல் இயல்பாக இருக்கும்.

- ஜோஸ் குயில்வெர்மோ செடினோ லாரென்ட்,ஆராய்ச்சியாளர், ஹார்வேர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us