sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நஞ்சாக மாறும் பிளாஸ்டிக்!

நஞ்சாக மாறும் பிளாஸ்டிக்!

நஞ்சாக மாறும் பிளாஸ்டிக்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னை, கர்ப்பப்பை தொடர் பானதாகவே இருக்கிறது. இது, 13 - 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மாற்றம். குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகள். பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையே, பெரும்பாலும் சாப்பிடுகிறோம். அதிலும், 20 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் அதிகமாகி வருகிறது; அதற்கு ஏற் றாற் போல் உடலுழைப்பும் கிடையாது.

உடலில் கொழுப்பு அதிகம் சேரும் போது, அது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனாக மாறும். இந்த ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே, கரு முட்டை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாதவிடாய் வரும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பில், ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகும் போது, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகள் வருகிறது.

இதுதவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பா மற்றும் கப்புகளில் சூடான உணவுகளை வைக்கும் போது ஏற்படும் நச்சு, ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் கோழி, மாடு மற்றும் இவற்றின் பால், இறைச்சி, முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு உட்பட, பல்வேறு விதமாக உணவுகளில் சேரும் விஷம், பொதுவாக உடல் நலத்தை பாதிக்கிறது என்றாலும், பெண்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உணவுகள் வழியே பிளாஸ்டிக், கெமிக்கல்கள் உடலில் சேரும் போது, ஜீனோ ஈஸ்ட்ரோ ஜென்னாக மாறி, உடலில் சேருகிறது. இதுவும் கர்ப்பப்பையின் உள் அடுக்கான எண்டோமெட்ரியத்தில், அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us