Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/அனல் காற்று அறிவிப்பு எப்போது வரும்?

அனல் காற்று அறிவிப்பு எப்போது வரும்?

அனல் காற்று அறிவிப்பு எப்போது வரும்?

அனல் காற்று அறிவிப்பு எப்போது வரும்?

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு இரண்டிற்கும் காரணம், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் வாயுக்கள், இது குறித்து வெளியாகியுள்ள பெரும்பாலான ஆய்வுகள், தென் மாநில நிலப்பரப்பு தான் அதிக அளவில் வெப்பத்தை உறிஞ்சுவதாக கூறுகிறது. இமயமலை உட்பட வட மாநில நிலப்பரப்புகள், சூரிய கதிர்களால் மட்டுமே வெப்ப மடைவதால், குறைந்த அளவே பூமியின் மேற்பரப்பு உஷ்ணமடைவதாக கூறுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு கோடைக்காலமான ஏப்ரல் - ஜூன் மாதங்களில், வழக்கமான சராசரி அளவை விட உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. பொதுவாக சராசரி வெப்பநிலையை விட 5 - 6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமானால் மட்டுமே அனல் காற்று வீசும் என்ற அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் செய்யும். ஏற்கனவே சராசரி வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருப்பதால், 4 - 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்தாலே அனல் காற்று எச்சரிக்கை விடப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பருவநிலை மாறுதல்களை ஏற்று, அபாயத்தை குறைப்பதற்கான ஆய்வு மையம் - சி.சி.சி.ஏ.ஆர்., வெளியிட்ட ஆய்வில், சென்னை உட்பட தமிழகம் முழுதும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரிக்கும் என கூறுகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில், 3 - 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரிக்கும். நெல்லை, கன்னியாகுமரி இரண்டிலும் குறைந்த பட்ச சராசரி வெப்பநிலை மட்டும் அதிகரிக்கும், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் கூறுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக வெப்பநிலை உயர்வால் ஏற்பட்ட தாக்கம், பொருளாதார இழப்புடன் ஆயிரக்கணக்கான உயிரிழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதீத உஷ்ணத்தால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முன், அறிகுறிகளான சோர்வு, மயக்கம், வேனல் கட்டிகள், நீர்ச்சத்து குறைபாடு என்று பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது, அடர்த்தியான நிற ஆடைகளை தவிர்ப்பது, வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.

டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னையில் உள்ள தேசிய நோய் தொற்றியல் துறையுடன் இணைந்து, வெப்ப மாறுபாட்டால் ஏற்படும் சுகாதார கேடுகள், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்கிறது.



பேராசிரியர் கே. நாராயணசாமி,

துணைவேந்தர், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம்,

சென்னை

vc@tnmgrmu.ac.in




      Our Apps Available On




      Dinamalar

      Follow us