Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/மூளை பாதுகாப்பிற்கு மூக்கு கவசம்

மூளை பாதுகாப்பிற்கு மூக்கு கவசம்

மூளை பாதுகாப்பிற்கு மூக்கு கவசம்

மூளை பாதுகாப்பிற்கு மூக்கு கவசம்

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
'நெக்லிரியா பைலரி' என்பது பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரி. அமீபா வகை நுண்ணுயிரியான இது, வெப்ப மண்டல நாடுகளில் சற்று வெதுவெதுப்பான ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வசிக்கும். இந்த நுண்ணுயிரியால் தொற்று ஏற்பட ஒரே வழி தான் உள்ளது.

அமீபா இருக்கும் நீர் நிலைகளில் உள்ள நீரை பயன்படுத்தும் போது, மூக்கின் வழியாக உள்ளே சென்று மூளையை தாக்கும். இதை, 'பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபலிடிஸ்' என்று சொல்லுவோம். தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக மிக அரிது.

வீட்டு பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் பொதுவாக ஏரி, குளங்களில் இருந்தே வருகிறது. முறையாக சுத்திகரிக்காவிட்டால் குழாய் நீரிலும் அமீபா இருக்கலாம். மூக்கை சுத்தம் செய்ய, குழாயில் வரும் நீரை மூக்கில் விடும் போது பாதிப்பு வரலாம்.

அரிதாகவே தாக்கும் தொற்று என்றாலும், உயிர் பிழைக்கும் வாய்ப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே. அமீபா தொற்று ஏற்பட்ட இரண்டு வாரங்களில் தலைவலி, காய்ச்சல், குழப்பம், கண் பார்வை பாதிப்பு, மறதி, பேச முடியாமல் போவது போன்ற அறிகுறிகள் தெரியும்.

சிகிச்சை எடுத்தாலும் 95 சதவீதம் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. உயிர் பிழைத்தாலும் அதன் பக்க விளைவுகள் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

ஏரி, குளம், நீச்சல் குளங்களில் குளிக்கும் போது, மூக்கு கவசம் அணிவது பாதுகாப்பானது.

டாக்டர் எம்.ஸ்ரீநிவாஸ்,

நரம்பியல் மருத்துவ ஆலோசகர்,

எம்.ஜி.எம்., ஹெல்த் கேர், சென்னை

86106 33190






      Our Apps Available On




      Dinamalar

      Follow us