Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Google News
Latest Tamil News
இன்று முதியோர் வீட்டில் தனியாக இருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இதுபோன்ற சமயங்களில், மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் ஸ்ட்ரோக் தாக்கலாம். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்திடம் கேட்டோம்.

* மொபைல் போன் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவசர உதவி எண்களை பதிவு செய்து, அதை பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.

* உங்கள் பிரச்னை, டாக்டர் பெயர், தொடர்பு எண் போன்றவற்றை எழுதி தெரியும் படி சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும்.

* ஸ்மார்ட் வாட்ச், ஆக்சிஜன் அளவு தெரிவிக்கும் சாதனங்களை பயன்படுத்த தெரிந்து இருப்பது கூடுதல் சிறப்பு.

* மருந்துகளை எப்போதும் ஒரே இடத்தில், சரியாக ஒழுங்குபடுத்தி வைக்க பழகிக்கொள்ளுங்கள். காலை, மாலை, இரவு, அவசர நேரங்களில் என பிரித்து, பார்ப்பவர்களுக்கு தெரியும்படி வையுங்கள்.

* வீடுகளின் அருகில் உள்ள நபர்களுடன், பேசி பழக வேண்டியது அவசியம். ஒரு சிலருடன் தினந்தோறும் பேசும் பழக்கம் ஏற்படுத்தி விடுங்கள். உங்களுக்கு முடியாமல் போகும் நேரம் உதவிக்கு ஓடி வருவார்கள்.

* மன அழுத்தம் தவிர்க்க யோகா, ஆன்மிக பயணம், சுற்றுலா, நண்பர்களுடன் அரட்டை என்று உங்களை, பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்.

* முடியாத நிலையில் பெரியோர் உள்ள வீடுகளில், கீழே விழுந்தால் உதவிக்கு பெல், சென்சார் செட்அப் செய்துவைக்கலாம்.

* மாரடைப்புக்கு முதல் உதவியாக இருக்கும் ( டிஸ்பிரின் 350 மி.கி-1, அடார்வாஸ்டாடின் 80 மி.கி -1, குலோபிடாப் 150 மி.கி., -2 ) லோடிங் டோஸ் மருந்துகளை இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்,எப்போதும் வைத்திருக்க வேண்டும். இவை, ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, மாரடைப்பின் தீவிரத்தன்மையை குறைக்கும். உங்கள் டாக்டரிடம் இதுகுறித்து முன்கூட்டியே தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

அறிவது முக்கியம்

இதயத்திற்கு ரத்தம் சரியாக செல்ல முடியாமல் போகும் போது ஏற்படுகிறது. சுவாசக் குறைபாடு, கால்களில் வீக்கம், எப்போதும் சோர்வு, சலிப்பு, இரவில் அதிகம் சிறுநீர் போதல், மூச்சுத்திணறல்.இதயத்திற்கு செல்லும் ரதத்தக்குழாய்களில் தடை ஏற்படுவதால் ஏற்படுகிறது. மார்பில் வலி, வலது மற்றும் இடது கை, கழுத்து, முதுகு, தோள்பட்டை பகுதிகளில் வலி பரவுதல், அதிக வியர்வை, வாந்தி உணர்வு, மூச்சுத்திணறல், திடீர் சோர்வு, மன அமைதி இல்லாமைமூளைக்கு ரத்தம் போகும் வழி தடைபடுவதாலும், ரத்தம் கசிவதால் மூளை பாதிக்கப்படுவதாலும் ஏற்படுகிறது. முக வடிவில் சற்று மாற்றம், கை மற்றும் கால்கள் ஒத்துழைக்காமை, பேச்சு மந்தமாவது, சரியாக பேச இயலாமை, திடீர் தலைவலி.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us