PUBLISHED ON : ஜூன் 08, 2025

புனேவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் (Glovatrix) கம்பெனி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சைகை மொழியை குரலாக மாற்றும் கையுறைகளை உருவாக்கியுள்ளது. இது காது கேளாதவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் வாயிலாக, பெருமூளை வாதம், ஆட்டிசம் மற்றும் இடப்பெயர்ச்சி கோளாறுகள் கொண்ட குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேச முடிந்தது என்பது, தெரிய வந்தது.
இதில் கை மற்றும் விரல் அசைவுகளை 3டி ஸ்பேசில் அளவிடக்கூடிய சென்சார்கள் உள்ளன. வலது ஆள்காட்டி விரலில் ஒரு பொத்தான் உள்ளது, அதை சைகைகள் செய்யும் போது அழுத்த வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கூறுகிறார். இவை 'அல்காரிதளம்'களால் இயக்கப்படுகின்றன; அவை அவற்றைக் கணித்து உரையாக மொழி பெயர்க்கின்றன. இது மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை பதிவு செய்து, காதுகேளாத பயனருக்காக 'டெக்ஸ்ட்' மற்றும் படங்களாக மாற்றுகிறது. காது கேளாதவர்களின் 100 சைகைகளின் அடிப்படையில் 98 சதவீதம் துல்லியத்தை இவர்கள் அடைந்துள்ளார்கள். மேலும் சைகைகளை சேர்க்கும் போது இது தொடர்ந்து அதிகரிக்கும், என்கின்றனர்.
என்ன பயன்கள்?
இந்த சாதனம், காது கேளாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான கற்றல் மற்றும் வேலை வாய்ப்பு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சைகை மொழியை உரையாக, பேச்சாக மொழி பெயர்த்தல், காது கேளாதவர்கள் சைகை மொழியில் பேசுவதை உணர்ந்து, அதை எழுத்து அல்லது பேச்சு வடிவில் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் மாற்றும் திறன். இது இருவழித் தொடர்பை மேம்படுத்தும். காது கேளாதவர்கள், தங்கள் கேள்விகளை சைகை மொழியில் அல்லது தட்டச்சு செய்து கேட்கும் போது, ஏ.ஐ., மூலம் பதில்களை பெறுகின்றனர்.
தொலைபேசி அழைப்புகள் அல்லது வீடியோ மாநாடுகளின் போது, நிகழ் நேரத்தில் உரையாடலை சைகை மொழிக்கும், சைகை மொழியை உரை, பேச்சுக்கும் மொழி பெயர்க்கும். நேர்காணலின் போது ஏற்படும் மொழித் தடைகளை நீக்கி, காது கேளாதவர்கள் திறம்பட தங்களை வெளிப்படுத்த உதவும். கேள்விகளை சைகை மொழியில் மொழி பெயர்த்து, பதில்களை பிற வடிவங்களுக்கு மாற்றும் வசதியும் உண்டு.
கூட்டங்கள், குழு விவாதங்கள் மற்றும் அன்றாட அலுவலக தொடர்புகளில் சைகை மொழி மொழி பெயர்ப்பு மற்றும் உரையாடல் வசதிகள். முக்கியமான அறிவிப்புகள் அல்லது பாதுகாப்பு வழிமுறைகளை சைகை மொழியில் வழங்குதல்; முக்கியமான செய்திகள் மற்றும் அவசரகால எச்சரிக்கைகளை சைகை மொழியில் அல்லது காட்சிப்படுத்தப்பட்ட வடிவத்தில் வழங்குதல். எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு வசதியான வடிவமைப்பு போன்றவையும் உள்ளன.
- சேதுராமன் சாத்தப்பன்