Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/செரிமான கோளாறுகள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி

செரிமான கோளாறுகள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி

செரிமான கோளாறுகள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி

செரிமான கோளாறுகள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி

PUBLISHED ON : ஜூன் 01, 2025


Google News
Latest Tamil News
சிறுநீரக செயலிழப்பு என்றாலே, 'டயாலிசிஸ்' செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் அதிகம் உள்ளது.

சிறுநீரக செயலிழப்பில் ஐந்து நிலைகள் உள்ளன. முதல் நான்கு நிலைகளை, தீவிரமாகாமல், மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும்.

ஐந்தாவது நிலையில், டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி ஸ்கிரீனிங் செய்தால், முதல் இரண்டு நிலைகளிலேயே கண்டறிந்து, மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு வாயிலாகவே சரி செய்யலாம்.

அது போல டயாலிசிஸ் தேவைப்பட்டாலே, இது வாழ்வின் கடைசி கட்டம் என்பதும் இல்லை.

வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை டயாலிசிஸ் செய்து, 15 ஆண்டுகளுக்கு மேல் இயல்பாக வாழ்பவர்கள் உள்ளனர். பிறவியிலேயே சிறுநீரக கோளாறு, இளம் வயதில் பிரச்னை இருந்தாலும் டயாலிசிஸ்செய்து இயல்பாக வாழலாம்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று தான் ஒரே வழி. அது வரையிலும் சிறுநீரகங்களின் வேலையை இயந்திரம் செய்யும்.

ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது. பல காரணங்களால் சிறுநீரில் புரதம் வெளியேறினால், கைகள் வீங்கும். யூரியா, கிரியாட்டினின் போன்ற நச்சு பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல், உடலில் தங்கினால், உள் உறுப்புகளை, குறிப்பாக குடலை பாதிக்கும்.

குமட்டல், வாந்தி தொடர்ந்து இருக்கும். செரிமானக் கோளாறு என்று நினைத்து, அதற்கான மருந்துகளை சாப்பிடுவோம்.

தீவிரமான அறிகுறி இருந்தால், மூச்சு வாங்க ஆரம்பிக்கும். சிறுநீர் வழக்கமான அளவைவிட குறைவாகப் போகும்.

கால் வீங்கும். உடன டியாக டயாலிசிஸ் செய்தால் பிரச்சனை கட்டுக்குள் வரும். தாமதித்தால் இதயம், மூளை பாதிக்கலாம்.

கிரியாட்டின் அளவு சிலருக்கு இயல்பான அளவான 0.7 -- 1.3 மி.கி/டெ.லி., இருக்கும். ஆனால், அறிகுறிகள் செயலிழப்பை காட்டும்.

அறிகுறிகளின் அடிப்படையில் டயாலிசிஸ் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து செரிமானப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் இருந்தால், சிறுநீரக செயல்பாட்டை பரிசோதிப்பது அவசியம்.

டாக்டர். ஈ. ராம்பிரசாத், பேராசிரியர், தலைவர்,

சிறுநீரகவியல் துறை, எஸ்.ஆர்.எம்.சி., சென்னை044-45928683/504ramprasad.e@sriramachandra.edu.in




      Our Apps Available On




      Dinamalar

      Follow us