Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பெண்களுக்கு ஏற்படும் இதய ரத்த நாள பாதிப்புகள்

பெண்களுக்கு ஏற்படும் இதய ரத்த நாள பாதிப்புகள்

பெண்களுக்கு ஏற்படும் இதய ரத்த நாள பாதிப்புகள்


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண் மற்றும் பெண்களுக்கு நோய் ஏற்படுவதற்கும், இறப்பிற்கும் இதயத்தின் முக்கிய ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு முக்கிய காரணமாக உள்ளது. மொத்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு இந்த நோய் காரணமாகவே இறப்பு ஏற்படுகிறது. இந்த நோய் பாதித்த மூன்றில் ஒரு பெண்ணுக்கு இறப்பு ஏற்படுகிறது. மேலும், இது இனம் மற்றும் மதம் பாகுபாடின்றி வரும் ஒருவித நோயாகும். இதற்கு முறையான மருத்துவ சிகிச்சைகளையும், மருத்துவ பரிசோதனைகளையும் செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தற்போது இந்த நோய் பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டு வந்தாலும், பொதுவாக இது ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த இதய ரத்தநாள பாதிப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாக இருந்தபோதிலும், தற்போது அது அதிகரித்து வருகிறது. இதற்கான ஆபத்து காரணிகளின் அடிப்படையில் இந்த நோய் பாதிப்பின் விகிதம் வயது வரம்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் நாம் கணக்கிடும்போது, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு குறைவாக ஏற்படுவதாக நமக்கு தெரிகிறது. அத்துடன், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு வித்தியாசமான அறிகுறிகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

இந்த ரத்த நாள நோய் காரணமாக, ஆண்டிற்கு பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட இன்டர்ஹார்ட் ஆய்வில், பெண்களுக்கு இதய ரத்த நாள பாதிப்பு என்பது ஆண்களுக்கு ஏற்படும் வயதைக் காட்டிலும் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின், பொதுவாக மாதவிடாய் நின்ற பின் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களாக இருந்தால் அல்லது அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்றவை இருந்தால் இந்த பாதிப்பு என்பது மாதவிடாய் நிற்பதற்கு முன்பே ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கடந்த 50 ஆண்டு களைப் பார்க்கையில், இந்த நோய் பாதிப்பு என்பது ஆண்களைக் காட்டிலும் தற்போது பெண்களுக்கு அதிகமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களைக் காட்டிலும், அவர்களுக்கு இளம் வயதிலேயே பல்வேறு ஆபத்து காரணிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதேசமயம் அது வயதானவர்களில் நேர்மாறாக இருக்கும். இதய ரத்த நாள பாதிப்பு ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் கொழுப்புகள் காரணமாக வேறுபடும். பெண்களுக்கு உள்ள உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குறைந்த அளவு அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம் மற்றும் அதிக அளவு மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன. உடலில் உள்ள ஸ்ட்ரோமெலிசின்-1 போன்ற சில ரசாயனங்கள் பிளேக் சிதைவில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது மற்றும் பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் இன்ஹிபிட்டர்-1 பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

மேலும், ஆண்களை விட பெண்களுக்கு வழக்கமான ஆஞ்சினா என்னும் மார்பு வலி ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆஞ்சினா என்னும் மார்பு வலி என்பது பெண்களைப் பொறுத்தவரை பயம், துக்கம் அல்லது மன அழுத்தத்தால் அதிகம் ஏற்படுகிறது. ஆஞ்சியோ செய்யும்போது காணப்படும் குறிப்பிடத்தக்க இதய ரத்த நாள நோய் என்பது மார்பு வலியுடன் இருக்கும் ஆண்களை விட பெண்களில் குறைவாக உள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது இந்த நோய் பாதிப்பு என்பது பெண்களுக்கு பொதுவான ஒன்றாகவே உள்ளது. அது ஆண்களைப் பொறுத்தவரை 41 சதவீதமாகவும் அது பெண்களுக்கு 8 சதவீதமாகவும் உள்ளது.

முதல் மாரடைப்புக்கு பின் ஆண்களை விட பெண்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், உயிர் பிழைத்தவர்களுக்கு, மீண்டும் மீண்டும் மாரடைப்பு, இதய செயலிழப்பு அல்லது இறப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. ப்ரேமிங்ஹாம் ஹார்ட் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், மாரடைப்பைத் தொடர்ந்து பெண்களின் இறப்பு விகிதம் 44 சதவீதமாகவும், அது ஆண்களில் 27 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சுருக்கமாக கூற வேண்டுமானால், இதய ரத்த நாளம் சார்ந்த நோய் பாதிப்பு என்பது தற்போது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us