Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கேன்சர் சிகிச்சை பெற எல்லாராலும் முடிகிறதா?

கேன்சர் சிகிச்சை பெற எல்லாராலும் முடிகிறதா?

கேன்சர் சிகிச்சை பெற எல்லாராலும் முடிகிறதா?


PUBLISHED ON : மார் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தற்போது இருப்பதை போன்று கேன் சர் சிகிச்சைக்கு பல விதமான மருந்துகள், சிகிச்சை முறைகள் கிடையாது; அறுவை சிகிச்சை தான் பிரதானம். அடுத்ததாக, 'ரேடியேஷன்' எனப்படும் கதிரியக்க சிகிச்சை செய்வோம்.

ஆரம்ப நிலையில் உள்ள கேன்சரை, அறுவை சிகிச்சை, ரேடியேஷன் உதவியுடன் குணப்படுத்த முடிந்தது.

நம் நாட்டில் நோய் முற்றிய நிலையில் வருவதால், 'கீமோதெரபி' தான் தர வேண்டியுள்ளது. ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை கேன்சருக்கான சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது, 100 கீமோதெரபி மருந்துகள் உள்ளன.

நம் நாட்டிலேயே தயார் செய்வதால் கீமோதெரபி மருந்துகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது. 'டோசிடாக்சல்' என்ற மருந்து 25 ஆண்டுகளுக்கு முன் 15,000; இன்று 1,500 ரூபாய். நிணநீர் கட்டிக்கான 'ஆன்டிபாடி' மருந்து அன்று 1 லட்சத்து 30,000; இன்று 15,000 ரூபாய்.

ஒரு ஆண்டு 'இம்மியூனோ தெரபி' சிகிச்சைக்கான செலவு 15 - 30 லட்சம் ரூபாயாகிறது.

மருந்தின் விலை

இந்த மருத்துவமனையை 2004ல் ஆரம்பித்த போதே, 'டோசிடாக்சல்' என்ற மருந்தின் விலை 15,000 ரூபாயாக இருந்தது.

மருந்து விற்பதில் எந்த லாபமும் நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்து, எங்கள் நோயாளிகளுக்கு 8,000 ரூபாய்க்கு கொடுத்தோம்.

பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் குறைந்த விலைக்கே தருகிறோம்.

கேன்சர் செல்கள் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை கண்டறிய பயன்படும் 'பெட் ஸ்கேன்'

செய்வதற்கு கார்ப்பரேட் மருத்துவமனையில் 35,000 ரூபாய் கட்டணம். ஆன்டர்சன் பரிசோதனைக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்து, 11,000த்திற்கு செய்கிறோம்.

பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு மானிய விலையில் சிகிச்சை செய்கிறோம்.

உலகத்தில் இந்த வியாதிக்கு இப்படி தான் சிகிக்சை செய்ய வேண்டும் என்ற நியதி உள்ளது. அதை முழுமையாக பின்பற்றுகிறோம்.

சிகிச்சை எடுத்தபடியே இயல்பாக வாழும் அளவுக்கு கேன்சர் சிகிச்சை சுலபமாகி விட்டது.



பேராசிரியர் டாக்டர் எஸ்.சுப்ரமணியன், கேன்சர் மருந்தியல் சிறப்பு மருத்துவர், தலைவர், வி.எஸ்., மருத்துவக் குழுமம், சென்னை90211 23000care@vshospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us