வேண்டாத விருந்தாளியை விரட்டும் தடுப்பூசி!

PUBLISHED ON : ஜூன் 15, 2025

கருப்பை வாய் கேன்சர், மற்ற கேன்சர் வகைகளை விடவும் வித்தியாசமானது ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் -ஹெச்பிவி, நீண்ட நாட்களாக உடலுக்குள் இருந்தால், செல்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, கேன்சரை உண்டாக்குகிறது.
வேண்டாத விருந்தாளியான இக்கிருமியை அழிக்கும் ஒரு வழி தடுப்பூசி.
இன்னொன்று, திருமணமான பெண்கள், கருப்பை வாய் பரிசோதனை செய்து கொண்டால், வைரஸ் இருக்கிறதா, அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதா என்பதைப் பார்க்க முடியும்.
இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றினால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போன்று நாமும் அடுத்த 20 வருடத்தில், கருப்பை வாய் கேன்சரை முற்றிலும் ஒழித்து விடலாம்.
இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் இதுவரை இருந்த நிலையில், பூனாவில் உள்ள சீரம் நிறுவனம் செர்வாவேக் என்ற தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. மற்ற எல்லா தடுப்பூசி போன்றே இதுவும் பாதுகாப்பானது.
ஆண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி...
ஹெச்பிவி வைரசில் 100க்கும் அதிகமான வகைகள் உள்ளன. இதில் 16, 18 ஆகிய இரண்டும், கருப்பை வாய் கேன்சர் தவிர, பெண் உறுப்பு, ஆசனவாய், ஆணுறுப்பு, தொண்டை போன்றவற்றிலும் கேன்சரை உண்டாக்க வல்லது.
பொதுவாக தாம்பத்திய உறவின் வாயிலாகவே பெண்களுக்கு கருப்பை வாய் கேன்சர் வருகிறது. ஆண்களுக்கு நோய் இல்லை என்றாலும், வைரஸ் தொற்று அவர்கள் வாயிலாக பரவலாம். ஒவ்வொரு முறை பெண்ணின் உடலுக்குள் வேண்டாத விருந்தாளியான வைரஸ் உள்ளே வரும் சமயங்களில் எல்லாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதை அழிக்கப் போராடும். எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்த வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடலினுள் இருந்தால், அது கேன்சராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிருமி உடலுக்குள் செல்வதற்கு முன்பே தடுப்பூசி செலுத்தினால், வைரசிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி விடும்.
இதனால் கிருமியால் நிரந்தர விருந்தாளியாக தங்க முடியாது.
தாம்பத்திய உறவு ஏற்படுவதற்கு முன் ஆண் / பெண் இருவருக்கும் 9-14 வயதில், ஆறு மாத இடைவெளியில் இரண்டு 'டோஸ்' போட வேண்டியது அவசியம்.
எங்கள் மையத்தில், 3,500 குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.
ஆதார் அடையாள அட்டை உட்பட தேவையான ஆவணங்களுடன் வந்தால், இத்தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
டாக்டர் என். ஜெயஸ்ரீ, கருப்பை வாய் கேன்சர் சிறப்பு மருத்துவர், அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், சென்னை044 22209150/183vassnthjayashree@gmail.com