ADDED : ஆக 24, 2010 03:03 AM
மதுரை: நண்பர்கள் அன்புக்குழு சார்பில், மதுரை பழைய மீனாட்சி நகரில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. ஜனதா தள நகர் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை ஆலோசகர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் காமராஜ், பொருளாளர் ஜனார்த்தனம், துணைத் தலைவர் முத்துராஜ், மாவட்டத் தலைவர் ரத்தினசாமி இலவச நோட்டு புத்தகம், சேலைகளை வழங்கினர்.