Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மார்க்கெட்டில் "பூ'வுக்கு கிராக்கி விலையில் நிலையில்லை

மார்க்கெட்டில் "பூ'வுக்கு கிராக்கி விலையில் நிலையில்லை

மார்க்கெட்டில் "பூ'வுக்கு கிராக்கி விலையில் நிலையில்லை

மார்க்கெட்டில் "பூ'வுக்கு கிராக்கி விலையில் நிலையில்லை

ADDED : ஆக 24, 2010 02:24 AM


Google News

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில், பூவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விலையில் ஏற்ற இறக்க நிலை காணப்படுகிறது.

பொள்ளாச்சி பூ மார்க்கெட்டிற்கு, நிலக்கோட்டை, திண்டுக்கல், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூ வரத்துள்ளது.

அரளி, கோழிகொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலிருந்து வருகிறது. கேரளாவில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டதால் பொள்ளாச்சி பூ மார்க்கெட்டிலிருந்து கேரளாவுக்கு அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டன.  நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ 900 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மதியத்திற்கு பின் பூ விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டது.

பூ மார்க்கெட் விலை நிலவரம் (கிலோவுக்கு): மல்லிகை - 400, சம்பங்கி - 150, செவ்வந்தி - 200, அரளி - 120, கோழிக்கொண்டை - 40, வாடாமல்லி - 100, செண்டுமல்லி - 60, முல்லை - 400, ஜாதிமல்லி - 350 என விற்பனையானது. பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டிற்கு நேற்று காலை வந்த பூக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. மதியத்திற்கு பின் பூ வரத்து குறைந்திருந்ததோடு, விலையிலும் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், முகூர்த்த

சீசன் என்பதால் பூவுக்கு தொடர்ந்து கிராக்கி இருப்பதால், இதே விலை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்புள்ளது'  என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us