/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் விருப்பம்நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் விருப்பம்
நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் விருப்பம்
நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் விருப்பம்
நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் விருப்பம்
ADDED : ஆக 23, 2010 11:07 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : நிறுத்தப்பட்ட செங்கோட்டை - ஈரோடு, சென்னை - செங்கோட்டை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- ஈரோடு ரயில் கடந்தாண்டு விடப்பட்டது. இந்த ரயில் விட்ட சில மாதங்களிலேயே வருமானத்தை கணக்கிற்கொண்டு ரயில் நிறுத்தப்பட்டது. அதே போல் சென்னை- செங்கோட்டை வாராந்திர ரயில் கடந்த மாதம் வரை இயங்கிவந்தது. இந்நிலையில் திடீரென இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களால் பயணிகள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் அறிவித்த படி செங்கோட்டை- கோவை ரயில் இது வரை இயக்கப்படவில்லை. தற்போது பெரும்பாலான பயணிகள் பஸ்சில் செல்வதை காட்டிலும் ரயில்களில் செல்வதையே விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் சென்னை- செங்கோட்டை, ஈரோடு- செங்கோட்டை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். அதே போல் தீபாவளிக்காக சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர்.