ADDED : ஆக 23, 2010 02:19 AM
சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பகுதியில் கரும்பு லாரி கவிழ்ந்ததையடுத்து, ஏழு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியான திம்பத்தில் இருந்துதான் கர்நாடகா மாநிலம் செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவு உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு, சத்தியமங்கலம் சர்க்கரை ஆலையை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. 21வது கொண்டை ஊசி வளைவில், திடீரென லாரி கவிழ்ந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள், கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் வரும் வாகனங்கள் பாதையில் நின்றிருந்தால், கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மலைப்பகுதியில் சாப்பிட எதுவும் கிடைக்காததால், பயணிகள் பசியுடன் இருந்தனர்.