/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விளையாட்டு ஆசிரியர்களுக்கு காத்திருக்குது முதலமைச்சர் விருதுவிளையாட்டு ஆசிரியர்களுக்கு காத்திருக்குது முதலமைச்சர் விருது
விளையாட்டு ஆசிரியர்களுக்கு காத்திருக்குது முதலமைச்சர் விருது
விளையாட்டு ஆசிரியர்களுக்கு காத்திருக்குது முதலமைச்சர் விருது
விளையாட்டு ஆசிரியர்களுக்கு காத்திருக்குது முதலமைச்சர் விருது
ADDED : ஆக 24, 2010 02:06 AM
கோவை: 2010-11ம் ஆண்டுக்கான சிறந்த பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் முதலமைச்சர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் உமாநாத் அறிக்கை:
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய சாதனைக்காக உரிய ஆவணங்கள் பெற்றுள்ள இரு பயிற்சியாளர்கள், இரு உடற்கல்வி இயக்குனர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியைக்கு முதலமைச்சர் விருது நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஒவ்வொரு தனி நபரும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், தகுதியுரையும் வழங்கி சிறப்பிக்கப்படுவர்.
2010-11ம் ஆண்டுக்கான மேற்கூறிய விருதுகள் வழங்க, பயிற்றுனர்கள் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டுக் குழுமம் மற்றும் இதர பயிற்றுனர்கள்) மற்றும் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2010 - 11 விருது ஆண்டுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஆவணங்களை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
2007ம் ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் 2010 மார்ச் 31ம் தேதி வரை, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நிலையான செயலாக்கம் மட்டுமே விருதுக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப் பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் தமது நிறுவன தலைமையின் மூலமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்விருதுக்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை www.sportsinfotn.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை 'முதலமைச்சர் விருதுக்கான விண்ணப்பம்' என்ற தலைப்பிட்ட உறையில், 'உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116, அ.ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை- 600 084' என்ற முகவரிக்கு வரும் நவம்பர் முதல் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மண்டல உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகங்களிலும் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் உமாநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.