1923ம் ஆண்டில் ‘லாங் டேங்க்’ முடிவுக்கு பிறகு தியாகராய நகர் உருவானது. தி.நகரைச் சுற்றிய இடங்களும் உருவெடுக்கத் தொடங்கின. நீதிக் கட்சியிடம் இருந்து பெறப்பட்ட இடத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வரும், நீதிக் கட்சியின் தலைவருமான பனகல் அரசர் நினைவாக பனகல் பூங்கா அமைக்கப்பட்டது. அதன்பிறகு, பாண்டி பஜாரும் உருவானது. இதற்கு முன்பு ’சவுந்தரபாண்டிய பஜார்’ என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
தற்போது, சென்னை மாநகரன் மிக முக்கிய வணிக மையமாக தி.நகர் விளங்குகிறது. 1935ம் ஆண்டு உருவான நல்லி ஷோரூம் தான் அப்போதைய முதல் பிரதான வணிக மையம். 1950ம் ஆண்டுகளைத் தொடர்ந்து தி.நகர் வியாபாரத்திற்கான முன்னோடி பகுதியாக முன்னேறத் தொடங்கியது.
இவைமட்டுமின்றி, தி.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாம்பலம் போன்ற பகுதிகளில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களும் அமைந்துள்ளன. தமிழக பண்பாடு, பாரம்பரியம் மட்டுமின்றி நவீனத்தையும் பிரதிபலிக்கிற்கது.


