/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/துளிர் ஜந்தர்மந்தர் வினாடி-வினா போட்டிதுளிர் ஜந்தர்மந்தர் வினாடி-வினா போட்டி
துளிர் ஜந்தர்மந்தர் வினாடி-வினா போட்டி
துளிர் ஜந்தர்மந்தர் வினாடி-வினா போட்டி
துளிர் ஜந்தர்மந்தர் வினாடி-வினா போட்டி
திருத்துறைப்பூண்டி: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மண்டல துளிர் தமிழ் வழி ஜந்தர்மந்தர், ஆங்கில வழி வினாடி வினாப்போட்டி திருத்துறைப்பூண்டி ஸ்ரீசாய்ராம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருத்துறைப்பூண்டி ரோட்டரிராக்ட் சங்கம் சார்பில் நடந்தது.ஆறு முதல் ப்ளஸ் 2 வரையிலான மாணவர்கள் 272 பேர், 65 வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.
அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சாந்தகுமாரி, சச்சிதானந்தம், சந்திரசேகரன், பாலசுப்பிரமணியன், கண்ணன், முத்துகுமார் ஆகியோர் நடுவர்களாக யல்பட்டனர்.ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜப்பன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் வேதரெத்தினம், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் விக்டர் ராஜ், ஸ்ரீசாய்ராம் மெட்ரிக் பள்ளி முதல்வர் லட்சுமி முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவி தமிழ்செல்வி ராஜா போட்டியை துவக்கி வைத்தார்.ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு பிரவில் குத்தாலம் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி, கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவக்கோட்டை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களையும், ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிரிவில் சிவகங்கை படமாத்தூர் சக்தி உயர்நிலைப்பள்ளி முதலிடம், திருக்கருக்காவூர் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், காமேஸ்வரம் தூய ஜெபஸ்தியார் உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன.ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பிரிவில் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், புதுக்கோட்டை கே.கே.பட்டி ஜீவன்ஜோதி மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், கீரனூர் புனித ஆரோக்கிய அன்னை பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.ஜந்தர்மந்தர் ஆங்கிலப்பிரிவில் ஆறு, ஏழு, எட்டு வகுப்பு பிரிவில் திருச்சி கைலாசபுரம் ஆர்.எஸ்.கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேவக்கோட்டை வெங்கடாசலச்செட்டியார் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிரிவில் திருவாரூர் வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மவுண்ட்ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களையும் பெற்றன.ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்பு பிரிவில் திருச்சி கைலாசபுரம் ஆர்.எஸ்.கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மன்னார்குடி ஸ்ரீபாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், திருவாரூர் வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.பரிசளிப்பு விழா நாகை மாவட்ட அறிவியல் இயக்கத்தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மனைத்துணைநாதர் வரவேற்றுப்பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., உலகநாதன் பரிசு வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொருளாளர் ஸ்டீபன்நாதன், நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்துரை, ரோட்ராக்ட் சங்க தலைவர் மகேஷ், முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, லயன்ஸ் சங்க தலைவர் ஜோசப்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இணைச் செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.


