/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணை நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்புமேட்டூர் அணை நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு
ADDED : ஆக 22, 2010 04:36 AM
மேட்டூர்: விநாடிக்கு10 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று மாலை 4 மணி முதல் விநாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூலை 28 முதல் 31ம் தேதிவரை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட்1ம் தேதி விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்ட டெல்டா பாசன நீர் மீண்டும் கடந்த 16ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக பருவமழை பெய்ததால் பாசனத்திற்கான நீர்தேவை குறைந்தது. அதனால், நேற்று மாலை 4 மணி முதல் டெல்டா நீர்திறப்பு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 84.840 அடியாகவும், நீர் இருப்பு 46.950 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் பருவமழை பெய்ததால் நேற்று மேட்டூர் அணை நீர்வரத்து 4 ஆயிரத்து 319 கனஅடியாக அதிகரித்தது.