Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/முன்னாள் துணைவேந்தர் வெங்கட்ரங்கன் மரணம்

முன்னாள் துணைவேந்தர் வெங்கட்ரங்கன் மரணம்

முன்னாள் துணைவேந்தர் வெங்கட்ரங்கன் மரணம்

முன்னாள் துணைவேந்தர் வெங்கட்ரங்கன் மரணம்

ADDED : ஆக 24, 2010 02:23 AM


Google News

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வெங்கட்ரங்கன் உடல் நலமின்றி இறந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த  2002ம் ஆண்டு முதல் 2008வரை 6 ஆண்டு கள் வெங்கட்ரங்கன் துணைவேந்தராக பணியாற்றினார். உடல் நலமின்றி சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட் ரங்கன் நேற்று இறந்தார். இவருக்கு சித்ரலேகா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்து துறைத் தலைவர் மற்றும் தொலைதூர கல்வி இயக்க இயக்குனர் போன்ற பதவிகளை வகித்தார். இவர் துணைவேந்தராக இருந்த போது பல்கலைக்கழக 75வது ஆண்டு விழா, 93வது இந்திய அறிவியல் மாநாடு ஆகியவை நடத்தப்பட்டது. முன்னாள் துணைவேந்தர் மறைவை யொட்டி சாஸ்திரி ஹாலில் துணைவேந்தர் ராமநாதன் தலைமையில் இரங்கல் கூட் டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத் திற்கு நாளை 25ம் தேதி விடுமுறை விடப் பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us