/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல்கலை பளுதூக்கும் போட்டி உமா மகேஸ்வரி புதிய சாதனைபல்கலை பளுதூக்கும் போட்டி உமா மகேஸ்வரி புதிய சாதனை
பல்கலை பளுதூக்கும் போட்டி உமா மகேஸ்வரி புதிய சாதனை
பல்கலை பளுதூக்கும் போட்டி உமா மகேஸ்வரி புதிய சாதனை
பல்கலை பளுதூக்கும் போட்டி உமா மகேஸ்வரி புதிய சாதனை
ADDED : ஆக 24, 2010 02:06 AM
கோவை: பாரதியார் பல்கலை பளுதூக்கும் போட்டியில் நிர்மலா கல்லூரி மாணவி உமா மகேஸ் வரி புதிய சாதனை படைத்தார்.
பாரதியார் பல்கலை உடற் கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவியருக்கான பளுதூக்கும் போட்டி பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.
கோவை, கோபி, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய இடங்களிலிருந்து 14 கல்லூரிகளை சேர்ந்த 124 மாணவியர், 48 கிலோ, 53, 58, 63, 69, 75, 75+ கிலோ உடல் எடை பிரிவுகளில் பங்கேற்றனர்.
'ஸ்நேச், கிளீன்-ஜெர்க்' இரு வகைகளில் பளு தூக்கி மொத்த எடை மூலம் வெற்றி அறிவிக்கப் பட்டன.
பாரதியார் பல்கலையின் காஞ்சனா 70 கிலோ தூக்கி முதலிடமும், பி.கே.ஆர்.,கலை கல்லூரி தீபா 66 கிலோவுடன் இரண்டாமிடமும் பெற்றனர்.
53 கிலோ எடை பிரிவில் நிர்மலா கல்லூரியின் உமா மகேஸ்வரி, 90 கிலோ தூக்கி முன்னிருந்த அம்மு சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.
பாரதியார் பல்கலை முத்துசெல்வி இரண்டாவது இடமும் பெற்றனர். 58 கிலோ எடை பிரிவில் ஆர்.வி.எஸ்.,கலை கல்லூரியின் செல்லமணி 97.5 கிலோ தூக்கி முதலிடமும், பாரதியார் பல்கலை இலக்கியா இரண்டாவது இடமும் பெற்றனர்.
63 கிலோ எடை பிரிவில், பி.கே.ஆர்.,கலை அறிவியல் கல்லூரியின் பொன்னி 85.5 கிலோ தூக்கி முதலிடமும், நிர்மலா கல்லூரி பிருந்தா இரண்டாமிடமும் பெற்றனர்.
69 கிலோ எடை பிரிவில், நிர்மலா பெண்கள் கல்லூரி கலைவிழி, 85 கிலோ தூக்கி முதலிடமும், பி.கே.ஆர்.,கலை கல்லூரி சரண்யா இரண்டாவது இடமும் பெற்றனர்.
75 கிலோ எடை பிரிவில், பி.கே.ஆர்.,கலை கல்லூரியின் கல்யாணி, 80 கிலோ எடை தூக்கி முதலிடமும், சுபம் இரண்டாவது இடமும் பெற்றனர்.
75+ கிலோ எடை பிரிவில், நிர்மலா கல்லூரியின் சுபிதா, 85 கிலோ எடை தூக்கி முதலிடமும், வித்யா இரண்டாவது இடமும் பெற்றனர்.
பாரதியார் பல்கலை உடற் கல்வி இயக்குனர் முருகவேல் போட் டியை துவக்கினார்.
தேசிய பளுதூக்கும் சங்க நடுவர் முனியப்பன், பல்கலை உடற்கல்வித்துறை உதவி ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கன்வீனர் குமரேசன் போட்டியை நடத் தினர்.