/உள்ளூர் செய்திகள்/சென்னை/எஸ்.ஐ.,க்கு கத்தி வெட்டு:காய்கறி கடைக்காரர் கைதுஎஸ்.ஐ.,க்கு கத்தி வெட்டு:காய்கறி கடைக்காரர் கைது
எஸ்.ஐ.,க்கு கத்தி வெட்டு:காய்கறி கடைக்காரர் கைது
எஸ்.ஐ.,க்கு கத்தி வெட்டு:காய்கறி கடைக்காரர் கைது
எஸ்.ஐ.,க்கு கத்தி வெட்டு:காய்கறி கடைக்காரர் கைது
ADDED : ஆக 24, 2010 01:43 AM
ஆவடி:திருமுல்லைவாயல், எஸ்.எம்., நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார் (46).
வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்.ஐ., யாக உள்ளார். நேற்று முன்தினம் ஆவடி மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்தார்.ஆவடி, நேரு பஜாரைச் சேர்ந்த கடைக்காரர் ஏகாம்பரத்திற்கும், குமாருக்கும் காய்கறி வாங்கு வதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஏகாம் பரம், கடையில் வைத்திருந்த கத்தியால், எஸ்.ஐ., குமாரின் கழுத்தில் வெட்டினார்.பலத்த காயமடைந்த குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆவடி போலீசார் காய்கறி கடைக்காரர் ஏகாம்பரத்தை கைது செய்தனர்.


