ADDED : ஆக 23, 2010 11:36 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் மனைவி அனிதா(31).
இவர் சத்திரக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அலுவலகத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு பஸ்சில் வந்தபோது, தனது சீட் அருகே அமர்ந்த ஒரு பெண் தன் மீது கை வைத்தவுடன் சுயநினைவு மறந்துவிட்டதாகவும், பின் நினைவு வந்து பார்த்தபோது மாடகொட்டான் பகுதியில் கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை காணாமல் தனியாக நின்று கொண்டிருந்ததாகவும் போலீசில் புகார் செய்துள்ளார். கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் நகை திருடிய மர்ம பெண்ணை தேடி வருகிறார்.