காரியாபட்டி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி காரியாபட்டி, மீனாட்சிபுரம், மந்திரி ஓடை, செவல்பட்டி, தோணுகால், மல்லாங்கிணர் மையங்களில் நடந்தது.
காகிதம், சார்ட், நாளிதழ், வண்ணக்காகிதம் ஆகியவற்றைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கென்னடி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்தனர்.