/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்! புலம்பும் புட்டுவிக்கி மக்கள்ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்! புலம்பும் புட்டுவிக்கி மக்கள்
ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்! புலம்பும் புட்டுவிக்கி மக்கள்
ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்! புலம்பும் புட்டுவிக்கி மக்கள்
ஒரு குடம் குடிநீர் 5 ரூபாய்! புலம்பும் புட்டுவிக்கி மக்கள்
பேரூர் : ஏழு லட்சம் ரூபாயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பல மாதங்களாக பயன்பாடின்றி வீணாகக் கிடக்கிறது.
பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் வார்டில் புட்டுவிக்கி கிராமம் உள்ளது. இங்கு, 600க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2008-09ம் ஆண்டில், அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, பேரூர் பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப் பட்டது.
ஐந்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட இத்தொட்டிக்கு பாரதிபுரம் குடிநீர் டேங்க் பகுதியிலிருந்து பேரூர் பெரியகுளம் தோட்டசாலை வழியாக 750 மீ., நீளத்துக்கு குழாய் போடப்பட்டு, தொட்டிக்கு தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, டேங்க் கட்டப்பட்ட பகுதியிலிருந்து சண்முகசெட்டியார் சாலை வரை, பேரூர் எம்.எல்.ஏ.,தொகுதி நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் செலவில் குழாய் விஸ்தரிப்பு பணிகளும் நடந்து முடிந்தது.
பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்வதற்கான சோதனை ஓட்டமும் நடந்தது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் குடிநீர் சப்ளை துவங்கவில்லை. இதனால், புட்டுவிக்கி கிராம மக்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து சென்று குடம் தண்ணீரை ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு விட இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். புட்டுவிக்கி பகுதி வார்டு கவுன்சிலர் மணியன் கூறுகையில்,'' குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் அமைக்க ஏழு லட்சம் ரூபாய் செலவிட்டும் கூட, மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. ''திட்ட பணிகளை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டுமென பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்,'' என்றார்.