Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரூ.20 லட்சம் கருவாடுகள் சேதம் மழையால் மீனவர்கள் கவலை

ரூ.20 லட்சம் கருவாடுகள் சேதம் மழையால் மீனவர்கள் கவலை

ரூ.20 லட்சம் கருவாடுகள் சேதம் மழையால் மீனவர்கள் கவலை

ரூ.20 லட்சம் கருவாடுகள் சேதம் மழையால் மீனவர்கள் கவலை

ADDED : ஆக 24, 2010 02:24 AM


Google News

கடலூர் : கடலூரில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்றுமதிக்கு தயார் நிலையிலிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடுகள் சேதமடைந்தன.

கடலூர் துறைமுகம், மீனவளத் துறை அலுவலகம் மற்றும் சோனங் குப்பம் தோணித்துறை ஆகிய இடங் களில் மீனவர்கள் கருவாடு தயார் செய்து, கோழி தீவனத்திற்காக ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். உற்பத்தி செய்யப்படும் கருவாடுகள், சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 40  முதல் 50 டன் வரை ஏற்றுமதி செய்து வந்தனர்.  சீசன் இல்லாத காலங்களில் வாரத் திற்கு 40 டன் ஏற்றுமதி செய்யப் பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கருவாடுக் காக மீன்கள் உலர வைப்பது குறைந்துள்ளது.



இருப்பினும் கடந்த ஒரு வாரமாக கடலூர் துறைமுகம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 3 களங் களிலும் மீன்களை உலர வைத்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடு களை ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைத்தி ருந்தனர். இந்நிலை யில் கடந்த 21ம் தேதி  இரவு முதல் பெய்த தொடர்  மழையால் கருவாடு கள் ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு வீணாகிப் போனது. இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகை யில், 'மழையால் கருவாடுகள் பாழாகிப் போனது. இவற்றை பள்ளம் தோண்டி அழிப்பதை தவிர வேறு வழியில்லை' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us