பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி
பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி
பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி
ADDED : ஆக 23, 2010 12:46 AM
மதுரை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆக.
26ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகள் மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலருக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று பேர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் எனில் அவரே மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுவோருக்கு முதற்பரிசாக ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 500 ரூபாயும் வழங்கப்படும். மாநில அளவில் சிபாரிசு செய்யப்பட்ட பின், தேர்ச்சி பெற்றால் முதல்பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.