கோவை : ஹிரோஷிமா, நாகசாகி யுத்த எதிர்ப்பு மற்றும் அணுஆயுத விழிப்புணர்வு தின போட்டி கோவையில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கணபதியில் உள்ள சி.எம்.எஸ்., மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு பள்ளி முதல்வர் காஜா செரிப் தலைமை வகித்தார்.
போட்டியை, காந்திகிராம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடந்தன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'அகதிகளாய் குழந்தைகள்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலானோருக்கு 'ஆயுத குவிப்பால் அமைதி கிட்டுமா' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு 'அணு போருக்கு அசோகர் சாட்சியானால்' என்ற தலைப்பில் கவிதை போட்டியும், ஆசிரியர்களுக்கு 'ஆயுதப்போட்டியும் அன்றாட உணவுக்கான போராட்டமும்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.