ADDED : ஆக 23, 2010 02:19 AM
சத்தியமங்கலம்: கவுதாரி பறவையை வேட்டையாடிய இருவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
சத்தியமங்கலம் வன அதிகாரி ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், ஆசனூர், தாளவாடி பகுதியில் ரேஞ்சர் சண்முகம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது தொட்டகாஜனூரை சேர்ந்த மாண்டியா (23), கணேசா (21) ஆகிய இருவரின் கையில் இரண்டு கவுதாரி பறவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேலும், கவுதாரியை வேட்டையாட தயாராக இருந்ததும் தெரியவந்தது. இருவருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.