ADDED : ஆக 23, 2010 11:06 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கூடைப் பந்து கழகத்தின் இணைச் செயலர் சரவணனின் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் செப்.
1 முதல் 5ம் தேதி வரை திருச்சியில் நடைபெறுகிறது.இதில் விருதுநகர் மாவட்ட அணிக்கான அணித் தேர்வு நாளை (25ம் தேதி) மாலை 4 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள கூடைப் பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.தகுதியுடைய கூடைப் பந்து வீரர்கள் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம். தகுதி:1.1.1997 அன்றோ அதன் பின்போ பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.