Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் மூடிக்கிடக்கும் அரசு கல்லூரி விடுதி : கொடிகட்டி பறக்கும் சமூக விரோத செயல்

கரூரில் மூடிக்கிடக்கும் அரசு கல்லூரி விடுதி : கொடிகட்டி பறக்கும் சமூக விரோத செயல்

கரூரில் மூடிக்கிடக்கும் அரசு கல்லூரி விடுதி : கொடிகட்டி பறக்கும் சமூக விரோத செயல்

கரூரில் மூடிக்கிடக்கும் அரசு கல்லூரி விடுதி : கொடிகட்டி பறக்கும் சமூக விரோத செயல்

ADDED : ஆக 22, 2010 04:36 AM


Google News

கரூர்: கரூரில் பயன்பாட்டில் இல்லாத அரசு கல்லூரி மாணவர் விடுதி, தற்போது சமூக விரோத செயலுக்கு பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது.

கரூர் மாவட்டம் துவங்கிய 1995 முதல் கடந்த 15 ஆண்டாக, கரூர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் போலீஸ் அலுவலகம் தற்காலிகமாக இயங்கியது. 2010 துவக்கத்தில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, போலீஸ் அலுவலகம் இடமாற்றப்பட்டது. ஆனால், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கட்டிடம் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், திறந்தே கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயலுக்கும் பாதுகாப்பான இடமாக மாறிவிட்டது. 'டைல்ஸ்' பொருத்தப்பட்டு எஸ்.பி., பயன்படுத்திய விசாலமான அறை உட்பட அனைத்து அறைகளும் திறந்து கிடப்பதால், சமூக விரோதிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கேட்டபோது, ''புதிய கட்டிடத்துக்கு போலீஸ் அலுவலகம் மாறியதும், ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருந்த கட்டிடத்தை அரசு கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டோம்,'' என்று கூறினர்.



கரூர் அரசு கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது: கல்லூரி மாணவர்களுக்காக துவங்கப்பட்ட விடுதியில், கட்டணம் செலுத்த வேண்டி இருந்ததால் மாணவர்கள் எவரும் சேரவில்லை. பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையில் இலவச விடுதி உள்ளதால், கல்லூரி விடுதிக்கு மாணவர் சேர்க்கை நடக்காததால், மாவட்ட போலீஸ் அலுவலகம் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளை விரிவுபடுத்தி வகுப்பறையாக பயன்படுத்துவது குறித்து உயர்கல்வித்துறை இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. கட்டிடம் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணி அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே, இட பற்றாக்குறை காரணமாகவே கல்லூரி வகுப்பு, 'ஷிஃப்ட்' அடிப்படையில் இயங்குவதால், இங்கு புதிதாக வகுப்பு அமைந்தால் வசதியாக இருக்கும். முதற்கட்டமாக, சமூக விரோத செயல் ஏதும் இந்த கட்டிடத்தில் நடக்காமல் இருக்க முழுமையாக பூட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். அரசுக்கு சொந்தமாக கட்டிடம் இல்லாமல் பல்வேறு துறையினர் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலை தற்போதும் உள்ளது. ஆனால், கரூரில் அரசுக்கு சொந்தமான கட்டிடம் இருந்தும் சரியாக பராமரிக்காத காரணத்தால் சமூக விரோதிகள் பிடியில் சிக்கிக்கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us