/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?
கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?
கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?
கட்டடம் கட்டுவதற்கு முன் நவதானியம் துாவுவது ஏன்?
ADDED : பிப் 24, 2024 12:13 AM

நம் மூதாதையர்கள் வீடு கட்டும் இடங்களிலும் மனையிடத்திலும், வீடு கட்டுவதற்கு முன் நவதானியங்களை தூவி, சில நாட்கள் கழித்து கட்டுமானப் பணியை துவங்கினர்.
அந்த நடைமுறை, தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆன்மிக ரீதியாக, நவதானியங்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துதான் வளரும். ஒவ்வொரு பயிறும் வெவ்வேறு விதமான சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்து வளரும்.
நவதானியங்களில், எந்தெந்த பயிர் நன்றாக வளர்ந்துள்ளது, எந்தெந்த பயிர் வளரவில்லை என்பதைப் பார்த்து, மண்ணின் கார மற்றும் அமிலத்தன்மையையும், எந்த மாதிரியான தாதுப்பொருட்கள் அடங்கிய மண் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அந்த மண்ணிற்கு ஏற்ப, கட்டுமான முறையை திட்டமிடுவர்.