/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/நிலத்தடி நீரை சுத்தப்படுத்த பயன்படுத்த உதவும் கருவிகள் என்ன? நிலத்தடி நீரை சுத்தப்படுத்த பயன்படுத்த உதவும் கருவிகள் என்ன?
நிலத்தடி நீரை சுத்தப்படுத்த பயன்படுத்த உதவும் கருவிகள் என்ன?
நிலத்தடி நீரை சுத்தப்படுத்த பயன்படுத்த உதவும் கருவிகள் என்ன?
நிலத்தடி நீரை சுத்தப்படுத்த பயன்படுத்த உதவும் கருவிகள் என்ன?
ADDED : ஜூலை 20, 2024 08:11 AM

புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும்போது, அந்த இடத்தில் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு கிடைக்கும், அது எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அடிப்படையில் மக்களிடம் ஆர்வம் இருந்தாலும், சில நடைமுறை காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுகிறது.
குறிப்பாக, ஒரு பகுதியில் நிலம் வாங்க வேண்டும் என்று பார்க்கச் செல்லும் நிலையிலேயே பெரும்பாலானோர், அங்கு தற்போது எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று விசாரிப்பார்கள். இதில், அந்த தண்ணீர் சுவை எப்படி இருக்கும் என்பதையும் அக்கம் பக்கத்தில் விசாரிப்பது வழக்கம்.
இந்நிலையில், தற்போது பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களில் மனை வாங்க அழைத்துச் செல்லப்படும் மக்கள், தனியாக சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க முடிவதில்லை. அழைத்துச் செல்லும் நிறுவனங்கள், அங்கு கிணறு அமைப்பதில்லை என்பதாலும், நிலத்தடி நீர் குறித்த விபரம் தெரிவதில்லை.
இதில், மனை வாங்கியவர்கள், அங்கு வீடு கட்ட போர்வெல் அமைக்கும்போது தான் தண்ணீரின் தன்மை தெரியவருகிறது. அப்போது, இயல்பாக பயன்படுத்தும் நிலையில் தண்ணீர் இருந்தால், அதனால், அதை பயன்படுத்துவதில், பிரச்னை எதுவும் இருக்காது.
ஆனால், சில இடங்களில் தண்ணீரில் உப்புத் தன்மை அதிகரித்து காணப்படும், இத்துடன் வேறு சில விஷயங்களால், தண்ணீரின் அடர்த்தி அதிகரித்து காணப்படும்.
இது போன்ற நீரை குளிப்பது, துணி துவைப்பது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது கூட பிரச்னையாகி விடும். நிலம் வாங்கி விட்டோம், அதில் வீட்டையும் கட்டிவிட்ட நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழலில், அந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்துக்கு செல்லவும் மக்கள் நினைக்கும் நிலையும் ஏற்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.
இதற்கு தீர்வாக, தற்போது பல்வேறு நவீன வழிமுறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நிலத்தடி நீர் எத்தகைய நிலையில் இருந்தாலும் அதை சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வரலாம். இதற்காக, 'வாட்டர் சாப்ட்னர்' உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன.
உங்கள் வீட்டில், கிணறு அல்லது போர்வெல் வாயிலாக எடுக்கப்படும் தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றும் நிலை அல்லது கீழ்நிலைத் தொட்டிக்கு ஏற்றும் நிலையில், வாட்டர் சாப்ட்னர் கருவியை இணைக்க வேண்டும். மின்னணு முறையில் செயல்படும் இந்த கருவிகள் வழியாக தண்ணீர் செல்லும்போது அது பல்வேறு கட்டங்களில் சுத்தப்படுத்தப்படும்.
இதன் காரணமாக, நீலத்தடி நீர் பயன்படுத்தும் நிலைக்கு வரும் போது, அதில் எவ்வித ரசாயன தன்மையும் இன்றி, நல்ல நிலையில் இருக்கும். இதை நேரடியாக குடிப்பதற்குக் கூட பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு வாட்டர் சாப்ட்னர் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.