Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ கட்டுமானத்தின் போது ஏற்படும் விபத்து ஒப்பந்தம் ஏற்படுத்தினால் சிக்கல் இருக்காது

கட்டுமானத்தின் போது ஏற்படும் விபத்து ஒப்பந்தம் ஏற்படுத்தினால் சிக்கல் இருக்காது

கட்டுமானத்தின் போது ஏற்படும் விபத்து ஒப்பந்தம் ஏற்படுத்தினால் சிக்கல் இருக்காது

கட்டுமானத்தின் போது ஏற்படும் விபத்து ஒப்பந்தம் ஏற்படுத்தினால் சிக்கல் இருக்காது

ADDED : ஆக 03, 2024 06:41 AM


Google News
''முறையாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால், கட்டுமானத்தின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அதற்கு கட்டட உரிமையாளரை பொறுப்புக்கு உள்ளாக்க முடியாது,'' என்கிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

மனை வாங்கிய பின், கட்டட அனுமதிக்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்கும் மனையடி சதுரடி கணக்கிலும், இதர பல்வேறு இனங்களில் தொகை செலுத்தி கட்டட அனுமதி பெற்று, வங்கி கடனுக்கு விண்ணப்பித்த பின், கட்டுமான பணியை, கான்ட்ராக்டரிடமோ அல்லது பொறியாளரிடமோ ஒப்படைக்கிறோம்.

கட்டுமான பணி நடைபெறும் சமயத்தில், எதிர்பாராத விதத்தில் விபத்து ஏற்பட்டு, கட்டடத்தில் பணிபுரியும் தொழிலாளருக்கு உடல் பாதிப்போ, உயிரிழப்போ ஏற்பட்டால், அதற்கு, இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையால் பதிவு செய்யப்படும் குற்ற வழக்கில், கட்டட உரிமையாளர் எதிரியாக சேர்க்கப்படுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட வேலையாள், தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல இணை/துணை ஆணையர் நீதிமன்றத்தில், தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்கிலும் உரிமையாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுவார்.

வழக்குகளுக்கு நேரில் ஆஜராக வேண்டியிருக்கும். வழக்கு செலவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இவற்றால் கால நேரம் வீணாகி, மன உளைச்சலை சந்திப்பவர்களை காண முடிகிறது. இதிலிருந்து உரிமையாளர்களை பாதுகாக்க என்ன வழி?

பெரும்பாலும் அனைத்து கட்டடங்களும் கான்ட்ராக்டர்கள் அல்லது பொறியாளர்களின் வாயிலாக, அவர்களின் நேரடி மேற்பார்வையிலேயே நடக்கிறது. உரிமையாளர் வேலை நடக்கும் சமயம், அங்கு இருந்திருக்க மாட்டார்.

கட்டுமானம் துவங்குவதற்கு முன்னரே, யாரிடம் அப்பணியை ஒப்படைக்கிறோமோ அவர்களிடம் முறையாக கட்டட ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, அதில் அனைத்து ஷரத்துக்களையும் சேர்த்து பணியை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு, முறையாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால், கட்டுமானத்தின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அதற்கு கட்டட உரிமையாளரை பொறுப்புக்கு உள்ளாக்க முடியாது.

சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டரோ, பொறியாளரோ ஒப்பந்தத்தை மீறி நடந்தாலோ சேவை குறைபாடு ஏற்படுத்தினாலோ, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாளர் நிவாரணம் பெற முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us