Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு பணிகளில் கவனிக்க வேண்டியது!

ADDED : ஜூலை 20, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வளாகங்களை பராமரிப்பது தொடர்பான பல்வேறு பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வருகிறது.

இன்றைய சூழலில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டால் அதன் பராமரிப்பு பொறுப்பு அங்கு வீடு வாங்கிய உரிமையாளர்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான சட்ட ரீதியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற குடியிருப்புகளில் சங்க நிர்வாகங்களுக்கு, பாதுகாவல் பணிகள் மிக முக்கிய பொறுப்பாக உள்ளது. கேட்டட் கம்யூனிட்டி என்ற அடிப்படையில் கட்டப்படும் அடுக்குமாடிகுடியிருப்பு வளாகங்களில் வெளியார் வருவது தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இதற்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை நியமிப்பது அத்தியாவசிய பணியாக உள்ளது. செக்யூரிட்டி என்ற பெயரில் பாதுகாவலர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான பணிகள் சங்க நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று மற்றவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.

பாதுகாவல் பணி தொடர்பான தெரியவரும் விஷயங்களை நிர்வாகிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். குறிப்பாக, உங்கள் வளாகத்துக்கு எத்தகைய நிறுவனம் வாயிலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது. இன்றைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக அமைக்கப்படுகின்றன. இதனால், எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைத்து பாதுகாவலர்கள் நியமிப்பதில் செலவு குறைப்பில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற அலட்சிய அணுகுமுறைகளால் குடியிருப்பு வளாக பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படுகிறது. பாதுகாவலர்களை நியமிக்கும்போது அவர்களை அனுப்பும் நிறுவனங்கள் இப்பணிக்கான முறையாக உரிமம் பெற்றுள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். தனியார் பாதுகாவல் நிறுவனங்கள் நடத்த வேண்டும் என்றால் அதற்கென உள்ள விதிகளின்படி ஒரு நிறுவனம் இருப்பதை உறுதி செய்து காவல் துறை உரிமம் வழங்குகிறது.

இந்த உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விஷயங்களை கவனித்து தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் குடியிருப்பு வளாகத்தில் நியமிக்கப்படும் பாதுகாவலர்கள், காவல் துறை வாயிலான நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான வரும் நபர்கள் குறித்த விபரங்களை உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us