/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை என்றால் செய்ய வேண்டியது என்ன? பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை என்றால் செய்ய வேண்டியது என்ன?
பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை என்றால் செய்ய வேண்டியது என்ன?
பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை என்றால் செய்ய வேண்டியது என்ன?
பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை என்றால் செய்ய வேண்டியது என்ன?
UPDATED : ஜூன் 17, 2025 03:52 PM
ADDED : ஜூன் 13, 2025 10:07 PM

கோவை மாவட்டம், சுண்டக்காமுத்துார் கிராமத்தில் ஆறுமுக கவுண்டன்புதுார் சுவாமி நகரில் கிழக்கு பார்த்த, 4 சென்ட் இடம் டீ.டி.சி.பி., அனுமதியுடன் விலைக்கு வருகிறது; என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-அ.தனலட்சுமி, கோவை.
சுண்டக்காமுத்துார் என்பது டவுன்ஹாலில் இருந்து, 10 கி.மீ., வளையத்துக்குள் உள்ளது. தற்போதைய சூழலில் டவுனில் இருந்து, 10 கி.மீ., வரையில் ரூ.12 லட்சத்துக்கு குறைவாக எந்த இடமும் கிடைப்பதில்லை. டீ.டி.சி.பி., லே-அவுட் என்பது ஒரு சிறப்புதான். குறைந்தது, 10-15 வீடுகள் அங்கு கட்டப்பட்டிருந்தால், சென்ட் ரூ.8 லட்சம் கொடுத்து தாராளமாக வாங்கலாம்.
கோவை மாவட்டம், போத்தனுார் - செட்டிபாளையம் பகுதியில் டீ.டி.சி.பி., சைட் ஐந்து சென்ட் இடத்தில் இரண்டு சென்ட் இடம் வாங்கலாம் என்று எண்ணி உள்ளேன். பட்டாவில் இடத்தின் உரிமையாளர் பெயர் இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
- ராகுல், சரவணம்பட்டி.
முதலில் கூட்டுப்பட்டாவா என்று பார்க்கவும். ஆம் எனில் அதில் உங்களுக்கு விற்பவர் அல்லது பிளாட் பிரித்தவர் என, முந்தைய உரிமையாளர் பெயர் இருந்தால் போதுமானது. விற்பவரை உரிய ஆவணங்களுடன், இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து, அவர்தம் பெயரை கூட்டுப்பட்டாவில் இடம்பெற செய்து வாங்குவதே மேன்மையானது. பட்டா பெயர் மாற்றம் செய்தபின் வாங்குவதே, பதிவுக்கு மற்றும் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் சமயங்களில் பெரும் நிம்மதியை தரும்.
கோவை, வெள்ளானைப்பட்டி கிராமத்தில் உள்ள, குடியிருப்போர் நகரில் பஞ்சாயத்து அப்ரூவல் சைட் விலைக்கு வருகிறது. விலை குறைவாக சொல்கிறார்கள். அப்படி என்றால் நாங்கள் சைட்டை டீ.டி.சி.பி., செய்ய என்ன செய்ய வேண்டும்.
- ரம்யாரேஷ்மா, ராம்நகர்.
இதுபோன்றவர்களுக்காகவே, தமிழக அரசு வரன்முறைப்படுத்தும் வசதியை ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதாவது, உங்களுக்கு விற்க இருக்கும் சைட் அல்லது அந்த லே-அவுட்டில் ஒரு சைட்டும், வரன்முறைப்படுத்த தகுதி உள்ள ஒன்றாகும். இந்த நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, அவரை உடனே இ-சேவை அல்லது உரிமம் பெற்ற கட்டட சர்வேயரை அணுகி, ஆன்லைனில் வரன்முறைப்படுத்த ஆவண செய்து பயன்பெறவும்.
என் உடல்நிலை காரணமாக என் சார்பாக, நீதிமன்றத்தில் ஆஜராக எனது கணவருக்கு பொது அதிகாரம் கொடுக்க சொல்கின்றனர். பத்திரமாக பதிந்து கொள்வது நல்லதா அல்லது நோட்டரி கையொப்பம் வாங்கிய ஆவணம் போதுமானதா என கூறவும்.
-சத்தியா, கோவை.
உங்கள் வழக்கறிஞர் வாயிலாகவே, இந்த பிரச்னையை சரி செய்ய முடியும். உங்கள் கணவர் ஆஜராகி உங்களுக்காக சாட்சியம் அளித்து, குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
-தகவல்: ஆர்.எம். மயிலேறு, கன்சல்டிங் இன்ஜினியர்.