Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ அடுக்குமாடி வீடுகளில் வானம் பார்த்த இடைவெளியை பராமரிப்பதில் பிரச்னை என்ன?

அடுக்குமாடி வீடுகளில் வானம் பார்த்த இடைவெளியை பராமரிப்பதில் பிரச்னை என்ன?

அடுக்குமாடி வீடுகளில் வானம் பார்த்த இடைவெளியை பராமரிப்பதில் பிரச்னை என்ன?

அடுக்குமாடி வீடுகளில் வானம் பார்த்த இடைவெளியை பராமரிப்பதில் பிரச்னை என்ன?

ADDED : மே 10, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
முந்தைய காலங்களில் வீடுகள் கட்டிய போது அதில் மையமாக ஒரு இடத்தில் வானம் பார்த்த இடம் விடப்படுவது வழக்கம். மழை, வெயில் ஆகிவற்றின்தாக்கம் வீட்டுக்குள் ஏதாவது ஒரு வகையில் வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களிலும் இது போன்ற அமைப்புகள் தவறாமல் இருந்ததை பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. வீட்டில் அனைத்து இடங்களையும் மேல் தளம் அல்லது கூரையால் மூடுவதற்கு பதில் ஒரு இடத்தை இப்படி வானம் பார்த்த முறையில் அமைப்பது வழக்கமாக இருந்தது.

பாரம்பரிய கட்டுமான முறையில் இருந்து விலகி, நவீன வடிவமைப்பில் வீடு கட்டும் போது இதற்கான வாய்ப்புகள் அரிதாகி போனது. பெரும்பாலான கட்டட வடிவமைப்பாளர்கள் உரிமையாளர் அழுத்தம் கொடுத்து கேட்டால் மட்டுமே இதற்கான வசதியை செய்கின்றனர்.

ஆனால், தற்போது நவீன வடிவமைப்புகளிலும் ஓ.டி.எஸ்., எனப்படும் வானம் பார்த்த பகுதியை அமைப்பதில் பலரும் கவனம் செலுத்துகின்றனர். கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும் போதே எந்த இடத்தில் பால்கனி இருக்க வேண்டும் என்று திட்டமிடுவது போன்று ஓ.டி.எஸ்.,க்கான இடத்தை முடிவு செய்கின்றனர்.

இதில் தரை தளம் மட்டும் கொண்டதாக கட்டப்படும் சாதாரண வீடுகளில் தான் இத்தகைய அமைப்புகளை ஏற்படுத்த முடியும். அடுக்குமாடி கட்டடங்களில் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், சமீப காலமாக புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் ஓ.டி.எஸ்., வசதி செய்யப்படுகிறது.

ஆனால், இந்த பகுதி மொத்தமாக திறந்த நிலையில் இருந்தால் நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாககூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான கட்டடங்களில், ஓ.டி.எஸ்., அமைக்கும் போது அதற்கான மேல் பகுதி கண்ணாடி போன்ற பொருட்களால் மூடப்படுகிறது.

இதனால், வெளியில் இருந்து மழைநீர் கொட்டாமல் இருக்கவும், பறவைகள் கூடுகட்டுவது, எச்சமிடுவதுபோன்ற பிரச்னைகளை தடுக்கலாம். நகர்ப்புற பகுதிகளில் கட்டடங்களில் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தும் போது பாதுகாப்பு ரீதியான விஷயங்களையும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, வீடுகளில் பால்கனி பகுதி வேறாகவும், ஓ.டி.எஸ்., பகுதி வேறாகவும் இருக்கும் வகையில் வடிவமைப்பு நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டும். சாதாரண கட்டடங்களில் போர்வெல் அமைக்கும்இடத்துக்கு மேல் இப்படி ஓ.டி.எஸ்., அமைப்பது மழைநீர் சேகரிப்புக்கும், போர்வெல் பழுது பார்ப்பு பணிக்கும் உதவியாக அமையும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us