Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ வீட்டை சுற்றிலும் இருக்கணும் பசுமை; ஜன்னல்கள் பல அமைந்தால் அருமை

வீட்டை சுற்றிலும் இருக்கணும் பசுமை; ஜன்னல்கள் பல அமைந்தால் அருமை

வீட்டை சுற்றிலும் இருக்கணும் பசுமை; ஜன்னல்கள் பல அமைந்தால் அருமை

வீட்டை சுற்றிலும் இருக்கணும் பசுமை; ஜன்னல்கள் பல அமைந்தால் அருமை

ADDED : ஜூன் 27, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
மனிதனின் வாழ்வில் அழகும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் நாம் வசிக்கும் வீடுகளில் இருந்தே ஆரம்பமாகின்றன. இவற்றை வீட்டு தோட்டங்கள் மற்றும் பிரகாசமான ஒளி வாயிலாக பெறலாம் என்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து பொறியாளர் சங்கத்தின்(காட்சியா) பட்டயத் தலைவர் சுரேஷ்குமார்.

அவர் கூறியதாவது...

ஒரு வீடு, இயற்கையோடு இணைந்து செயல்பட்டால், அழகோடு சேர்ந்து ஆரோக்கியமும் நிச்சயம் கிடைக்கும்; மகிழ்ச்சியும் தரும். முறையான தோட்ட அமைப்பு என்பது 'லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்' மற்றும் தோட்டக்கலை வல்லுனர்களை வைத்து, சதுர, செவ்வக மற்றும் ஜாமென்ட்ரிக்கல் வடிவில் இடத்திற்கு ஏற்று அமைப்பது.

இதில் வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகவும், முறையான வளர்ப்பு விதிகளையும், அழகுக்காக 'டிரிம்'(மேலோட்டமாக வெட்டுதல்) போன்ற முறைகளில் அமைக்கப்படுகிறது.

முறையற்ற தோட்ட அமைப்புகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வடிவில் அமையாது. சமமான நில அமைப்போ, செடிகளின் அமைப்பு பெற்றிருக்காது. பெரும்பாலும் நாம் கட்டியிருக்கும் இடத்தில் இயற்கையாக வளர்ந்திருக்கும்.

இதில், அழகுக்காக எந்த கட்டிங் மற்றும் டிரிம்மிங் செய்வதில்லை. வனாந்தர தோட்ட அமைப்பு பெரும்பாலும் உயரமான மரங்களாலும், செடி கொடிகளாலும் உள்ள அமைப்பை காணலாம். மலைப் பகுதிகளிலும், வனத்தை ஒட்டியுள்ள இடங்களிலும் இப்படி அமைத்துக் கொள்கின்றனர்.

இதில், பலவகை மரங்களும், செடிகளும், மூலிகைகளும் அடங்கியுள்ளன. நம் வீட்டில் சிறு தோட்டம் அமைக்கப்படுவதால், பசுமையான தோற்றத்துடன் ஒரு விசாலமான இடமாக காட்சியளிக்கும். துாய்மையான காற்று கிடைக்கும்.

நம் குழந்தைகள் விளையாடுவதற்கு சிறந்த அமைப்பாக இருக்கும். வெயில் மற்றும் காற்றின் வேகத்தில் இருந்து, நம் வீட்டை பாதுகாக்கும். மாலை நேரங்களில் அமைதியாக பொழுதைகழிக்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தெரிந்து கொள்ளுங்கள்

இயற்கையான சூரிய ஒளி, வீட்டினுள் வரவேண்டும் என்றால் 'கிளைமேடாலஜிக்கல்' முறையை தெரிந்து கொண்டு, வீட்டின் ஜன்னல்களின் அமைப்புகளை சரியான திசைகளில் அமைக்க வேண்டும். இதனால் கிடைக்கும் வெளிச்சத்தால், மின்சாரம் போன்ற ஆற்றல் சேமிக்கப்படுகிறது. எனவே, நாம் வீடு கட்டும்போது முறையான தோட்ட அமைப்புகள், வென்டிலேஷன் அமைப்புகளோடு கட்டிக்கொண்டால், அழகோடு ஆரோக்கியமும் பெருகும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us