Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/பிரீமியம் தரத்தில் பேவர் பிளாக்குகளை தேர்வு செய்வது எப்படி?

பிரீமியம் தரத்தில் பேவர் பிளாக்குகளை தேர்வு செய்வது எப்படி?

பிரீமியம் தரத்தில் பேவர் பிளாக்குகளை தேர்வு செய்வது எப்படி?

பிரீமியம் தரத்தில் பேவர் பிளாக்குகளை தேர்வு செய்வது எப்படி?

ADDED : ஜூலை 27, 2024 08:16 AM


Google News
Latest Tamil News
வீடுகளில் தரை அமைப்பதற்கு பதிகற்கள் தேர்வு செய்வதில் மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அது சார்ந்த வர்த்தகம் வளர்ந்துள்ளது. இது விஷயத்தில், மக்களின் ஆர்வத்தை மேலும் துாண்டும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. வீட்டுக்குள் அனைத்து அறைகளிலும் ஒரே மாதிரி வடிவமைப்பில் பதிகற்கள் அமைக்கும் பழக்கம் எல்லாம் தற்போது வழக்கொழிந்துவருகிறது. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணத்தில், வடிவமைப்பில் பதிகற்கள் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது.

வீட்டின் உட்புற அமைப்பு, சுவரில் அடிக்கப்படும் வண்ணம், உள் அலங்காரம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிகற்களை தேர்வு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அடுத்த கட்டமாக, வீட்டிற்கு வெளியில் உள்ள பகுதிகளில் சிமென்ட் தரை அமைக்கும் பழக்கத்துக்கு மாற்றாக பேவர் பிளாக் அமைப்பது அதிகரித்துள்ளது. வீடுகளின் வெளியில் தாழ்வாரம் முதல் வாயில் வரையிலான பகுதிகளில் சிமென்ட் தரை அமைப்பதை கைவிட்டு மக்கள் பேவர் பிளாக்குகள் அமைக்க துவங்கிவிட்டனர்.

நிலத்தை சமன் செய்துவிட்டு அதன் மேல் பேவர் பிளாக்குகளை அமைத்தால் போதும் என்ற அளவில் மக்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். ஒரு இடத்தில் பேவர் பிளாக்குகள் அமைக்கும் முன் அங்கு நிலத்தின் தன்மை, அதன் மேல் சிமென்ட், மணல் ஜல்லி பயன்படுத்தி ஒரு தரை அமைக்க வேண்டும். இதன் மேல் பேவர் பிளாக்குகளை அமைத்தால் அது நீண்ட காலத்துக்கு பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

குறிப்பாக, வீட்டின் வெளிப்புற பகுதியில் பேவர் பிளாக்குகள் அமைக்கும் போது அதன் மேல் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை பார்க்க வேண்டும்.

மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்தோடும் வகையில் வாட்டம் பார்த்து தான் பேவர் பிளாக்குகளை அமைக்க வேண்டும்.வீட்டின் முகப்பில் பேவர் பிளாக்குகள் அமைக்கும் முன் தரையை தயார்படுத்தும் நிலையில், அங்கு என்ன வகை வாகனம் நிறுத்தப்படும் என்பதை கவனிக்க வேண்டும்.

அதிக எடை உள்ள வாகனங்கள் நிறுத்தப்படும் என்றால் அங்கு லேசான பேர் பிளாக்குகளை அமைப்பதை தவிருங்கள். இது போன்ற பகுதிகளில் அதிக சுமை தாங்கும் வகையில் பேவர் பிளாக்குகள் போன்ற சிறப்பு வகைகற்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தொழில்முறை வல்லுனரின் வழிகாட்டுதல் அடிப்படையில் பயன்படுத்துவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இதில் தற்போது, நீர் உறிஞ்சும் தன்மையுள்ள சிறப்பு தரத்திலான பேவர் பிளாக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்காக பிரீமியம் வகையிலும் பேவர் பிளாக்குகள் வந்துள்ளன என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us