/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ 'சென்ட்ரிங்' அமைப்பை எத்தனை நாளில் பிரிக்கலாம்? 'சென்ட்ரிங்' அமைப்பை எத்தனை நாளில் பிரிக்கலாம்?
'சென்ட்ரிங்' அமைப்பை எத்தனை நாளில் பிரிக்கலாம்?
'சென்ட்ரிங்' அமைப்பை எத்தனை நாளில் பிரிக்கலாம்?
'சென்ட்ரிங்' அமைப்பை எத்தனை நாளில் பிரிக்கலாம்?
ADDED : ஜூன் 06, 2025 07:58 AM

என்னுடைய வீட்டில் மொசைக் பதித்துள்ளேன். இப்பொழுது புதிதாக வந்துள்ள டைல்ஸ் பதிக்க விரும்புகிறேன். அதற்கு மொசைக் கற்களை உடைத்து எடுக்க வேண்டுமா?
-கணேஷ், செல்வபுரம்.
தரைத்தளம் சமமாகவும், வலிமையாகவும் இருக்கும் பட்சத்தில், உடைக்க வேண்டிய தேவை இல்லை. பேஸ்ட் வைத்து டைல்ஸ் ஒட்டிக் கொள்ளலாம். அனைத்து கதவுகளையும் டைல்ஸ் கனத்திற்கு கட் செய்து, மீண்டும் பொருத்திக் கொள்ளலாம்.
நான் இப்பொழுது புதிதாக வீடு கட்ட ஆரம்பித்துள்ளேன். கான்கிரீட் வரை தேவையான சிமென்ட்டை வாங்கி, ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமா?
-செல்வராஜ், ஆலாந்துறை.
கட்டுமான பொருட்களை வைப்பதற்கு, தனியாக குடோன் இருப்பது மிகவும் அவசியம். மழை, வெயில் என எந்த காலத்திலும் சிமென்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியது கட்டாயம். குறிப்பாக, மழை காலங்களில் சிமென்ட் கட்டியாகிவிடும். மழையில் நனையும் கம்பி, வெயில் காலத்தில் துருப்பிடிக்கும். இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க வேண்டும். எனவே, தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்துவது மிகச் சிறந்தது.
வீடு கட்ட செங்கல் அல்லது 'பிளை ஆஷ்' கல் எது சிறந்தது?
-சங்கர், வடவள்ளி.
இரண்டுமே சிறந்தது தான். ஆனால், செங்கலை விட பிளை ஆஷ் கல் உறுதியானது. கட்டடத்தின் அரிப்பு தன்மையை தடுக்கிறது. விலையை ஒப்பிடும்போது பிளை ஆஷ் கல் விலை மிக குறைவு. கட்டடத்தின் வலிமையையும் கூட்டுகிறது.
நான் வீடு கட்ட உள்ளேன் 'அப்ரூவல்' பிளான் அவசியமா?
-சுந்தரம், வடமதுரை.
அப்ரூவல் பிளான் மிகவும் அவசியம். ஏனெனில் வீடு கட்டிய பின்பு, வீட்டுக்கு வரி போடவும் , குடிநீர் இணைப்பு பெறவும் முக்கியமானது. வங்கியில் கடன் பெறவும், அப்ரூவல் மிகவும் முக்கியமானது. அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டுவது முறையல்ல.
நான் கட்டும் புதிய வீட்டில், இப்பொழுது கான்கிரீட் போட்டு உள்ளேன். சென்ட்ரிங்கை ஏழு நாட்களில் பிரிக்கலாமா?
-குமார், சிங்காநல்லுார்.
'பிரேம்டு ஸ்டிரக்சர்' அதாவது காலம், பீம் இருக்கும் பட்சத்தில், சென்ட்ரிங்கை எட்டு நாட்களில் பிரித்து பீம்க்கு ஜாக்கி வைத்து, சப்போர்ட் செய்து வேலையை ஆரம்பிக்கலாம். 'லோடு பேரிங் ஸ்டிரக்சர்' அதாவது பீம் காலம் இல்லாத போது, கண்டிப்பாக, 15 முதல், 21 நாட்கள் கழித்துதான் சென்ட்ரிங் பிரிக்க வேண்டும்.
-பிரேம் குமார்பாபு
செயலாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.