Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/பழைய மொசைக் புளோரிங் மீதே நவீன டைல்ஸ் அமைக்கலாமா?

பழைய மொசைக் புளோரிங் மீதே நவீன டைல்ஸ் அமைக்கலாமா?

பழைய மொசைக் புளோரிங் மீதே நவீன டைல்ஸ் அமைக்கலாமா?

பழைய மொசைக் புளோரிங் மீதே நவீன டைல்ஸ் அமைக்கலாமா?

UPDATED : பிப் 24, 2024 10:27 AMADDED : பிப் 24, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
''பழைய மொசைக் ப்ளோரிங் மீதே, புதியதாக வந்துள்ள டைல்ஸ் பதிக்கலாம்,'' என்கிறார், கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன். கட்டட கட்டுமானம் தொடர்பான, வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஜெகதீஸ்வரன்.

வாஸ்து படி ஒவ்வொரு அறைக்கும், எந்தெந்த திசையில் கதவுகள் அமைக்க வேண்டும்?

-- சரவணன், திருப்பூர்



ஒவ்வொரு அறையின்வடகிழக்கு மூலையில், கிழக்கு பார்த்தும் அல்லது வடக்கு பார்த்தும், வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தும், தென்கிழக்கு மூலையில் தெற்கு பார்த்தும், இருக்குமாறு கதவுகள் அமைக்க வேண்டும்.

வழக்கமான முறையில் செப்டிக் டேங்க் அமைத்துள்ளோம். முன்பெல்லாம் குதிரை சாணத்தை செப்டிக் டேங்கில் கரைத்து விட்டு, கசடுகள் சேராமல் தடுக்கும் வகையில் இருந்தது. தற்போதைய நவீன காலகட்டத்தில், குதிரை சாணம் கிடைப்பது அரிது. பழைய டேங்க்கை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதற்கு, மாற்று வழி ஏதேனும் உள்ளதா?

-மோகனாம்பாள், இருகூர்



நீங்கள் சொல்வது போல், தற்போது குதிரை சாணம் கிடைப்பது அரிது. இதற்கு மாற்றாக பவுடர் வடிவில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பாக்டீரியா பாக்கெட்களில் கிடைக்கிறது.

இதனை க்ளோசட் வழியாக கொட்டி, தண்ணீர்ஊற்றினால் போதும். இதில் உள்ள பாக்டீரியா, டேங்க்கில் உள்ள கசடுகளை நீராக மாற்றிவிடும். இந்த நீரை, நேரடியாக செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

எந்த மாதிரியான கட்டடங்களுக்கு, அவசரகால வழி மற்றும் படிக்கட்டுகள் வைத்து கட்ட வேண்டும்?

-வினோத், இடிகரை



வணிக வளாகம், தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தியேட்டர்கள், மால்களில் அவசர கால வழி மற்றும் படிக்கட்டுகள் வைக்க வேண்டும்.

நாங்கள் தரைதளம் கட்டி ஐந்து ஆண்டு ஆகிறது. தற்போது முதல் தளம் கட்டி வருகிறோம். தரைதளத்தில் உள்ள காலம் போஸ்ட்டை விட, முதல் தளத்தில் உள்ள காலம் போஸ்ட் மூன்று அங்குலம் தள்ளி உள்ளது. கார்பென்டர், கம்பியை 'கிங்' அடித்து நேராக்கி விடலாம்என்கிறார். அவ்வாறு செய்யலாமா?

- ராஜா, சுந்தராபுரம்



கட்டடத்தை நேரில் வந்து ஆய்வு செய்ய, பொறியாளர் ஒருவரை அணுகி அவரது ஆலோசனையை கேட்டு, பணியை தொடரவும். காலம் போஸ்ட் கம்பிகளை 'கிங் ' அடிக்க வேண்டாம். ஒரு வேளை கம்பி துருப்பிடித்திருந்தால், 'கிங்' அடிக்கும் பொழுது உடைய வாய்ப்பு உள்ளது.

எனது வீட்டின் அனைத்து அறைகளிலும், மொசைக் புளோரிங் அமைத்துள்ளோம். பல இடங்களில் சிறிது, சிறிதாக மொசைக் சிப்ஸ் கற்கள் பெயர்ந்து வருவதால், டைல்ஸ் புளோரிங் அமைக்க முடிவு செய்துள்ளோம். பழைய மொசைக் புளோரிங் மீதே, டைல்ஸ் பதிக்கலாமா?

- கார்த்திகேயன், இடிகரை

பழைய மொசைக் புளோரிங் உறுதியாக இருக்குமானால், அதன் மீது டைல்ஸ் பாதிக்கலாம். அதற்கென பிரத்யேக டைல்ஸ் பேஸ்ட்டை, பயன்படுத்திதான் டைல்ஸ் பதிக்க வேண்டும். அல்லது மொசைக் புளோரிங் முழுவதையும், எடுத்த பின் புதியதாக டைல்ஸ் புளோரிங் அமைக்கலாம்.

தற்போது மொபைல் போன் பயன்படுத்தி, வீட்டில் உள்ள லைட், பேன், ஏசி, ஹீட்டர் போன்றவற்றை இயக்கும் வகையில்உள்ள, ஹோம் ஆட்டோமேஷன் வசதியை பழைய வீடுகளுக்கும், பொருத்த முடியுமா?

- அசோக்குமார் அத்திபாளையம்



நிச்சயமாக பொருத்த முடியும். ஸ்மார்ட் ஹோம் அல்லது ஹோம் ஆட்டோ மேஷன் என்பது இன்டெர்நெட் வாயிலாக, வீட்டில் உள்ள டிவி, பேன், லைட், கேமரா, ஏசி, வாஷிங்மெசின் மட்டுமின்றி, குழந்தைகளின் நடவடிக்கைகள் அவ்வளவு ஏன், செல்லப்பிராணிகளின் அசைவுகளை கூட கண்காணிக்கலாம்.நீங்கள் வெளியூரில் இருந்தாலும், உங்களது வீட்டை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் இவை உதவுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us