டி.வி.எஸ்., மின்சார ஆட்டோ அறிமுகம்
டி.வி.எஸ்., மின்சார ஆட்டோ அறிமுகம்
டி.வி.எஸ்., மின்சார ஆட்டோ அறிமுகம்
ADDED : மே 29, 2025 08:15 AM

'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'கிங் இ.வி., மேக்ஸ்' என்ற பயணியர் மின்சார ஆட்டோவை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 2.95 லட்சம் ரூபாயாக உள்ளது.
இந்த ஆட்டோவில், 9.2 கி.வாட். ஹார்., லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 179 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த ஆட்டோவின் முழு சார்ஜ் செய்ய, 3 மணி நேரம் 30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம், 60 கி.மீ.,ராகவும், தண்ணீரில் பயணிக்கும் திறன் 500 எம்.எம்., ஆகவும் உள்ளது.
அம்சங்களை பொறுத்த வரை, டிஜிட்டல் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி, ப்ளூடூத் இணைப்பு, ஸ்மார்ட் போன் சார்ஜிங் வசதி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஆட்டோவிற்கு, 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ.,ருக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.